ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ஆதவ், அருண்ராஜ் கலகம்.. சீறிய புஸ்ஸி.. ஜான் காட்டிய ‘படம்’.. மிரண்டு போன விஜய்

Published On:

| By Mathi

Digital Thinnai TVK

வைஃபை ஆன் செய்ததும், ’என்ன பாட்டு பாடுறது?ன்னு குழப்பமா இருக்கேன்னு சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

ADVERTISEMENT

என்னய்யா ஒரே ‘குழப்பமா’ இருக்கிறீரு?

ADVERTISEMENT

சேதி சொல்ற நமக்கு என்னய்யா இன்பம் துன்பம் குழப்பம்.. விஜய்யின் தவெக மாவட்ட செயலாளர்கள்- நிர்வாக குழு கூட்ட முடிஞ்சதுக்கு பிறகு அந்த கட்சிகாரங்ககிட்டதான் இந்த நிலவரம்னு சொல்றேன்….

என்னய்யா சொல்றீங்க? என்னவெல்லாம் நடந்துச்சு விலாவாரியாக சொல்லிவிடும்..

ADVERTISEMENT

தவெகவோட மாநில நிர்வாகிகள், மா.செ.க்கள் கூட்டம் நேத்து பனையூர் ஆபீசுல நடந்துச்சு. இந்த கூட்டத்துல விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜூ, வெங்கட்ராமன், சிடி நிர்மல்குமார், ஜான் ஆரோக்கியசாமின்னு பழைய டீமும் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்துன்னு புதிய ஆட்களும் கலந்துகிட்டாங்க..

இதுல, வழக்கம் போல விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் கூட்டணி; விஜய்க்கு கூட்டணி பத்தி முடிவெடுக்க முழு அதிகாரம்; தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுன்னு தீர்மானங்கள் போட்டாங்க..

ADVERTISEMENT

நெக்ஸ்ட் நெக்ஸ்ட்.. சொல்லுமய்யா

ஏனப்பு இவ்ளோ அவசரம்.. நிர்வாக குழுவுல கலந்து கிட்ட மாநில நிர்வாகிகளில் ஒருவர் நம்மகிட்ட டீட்டெய்லா சொன்ன விஷயங்கள் என்னான்னா, “கூட்டத்துக்கு முன்னாடியே ஒரு டிஸ்கஷன் நடந்துருக்கு அதுல தளபதிகிட்ட, கட்சியை பத்தி மீடியாவுல சில ரிப்போர்ட்ஸ் வந்துகிட்டு இருக்கு.. அதை எல்லாம் கூட்டத்துல ஓபனா பேசிடலாமானு ஆதவ், அருண்ராஜு எல்லாம் கேட்டிருக்காங்க.. தளபதிக்கும் இந்த ரிப்போர்ட்ஸ் ஏற்கனவே போனதால, ‘எதையா இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்க பார்த்துக்கலாம்’னு கிரீன் சிக்னல் கொடுத்து வெச்சிருந்தாருன்னு சொன்னாங்க..
அது உண்மைதான்னு ஆதவ், அருண்ராஜ் பேசுனப்பதான் எங்களுக்கே புரிஞ்சது..” என்றார்

ஆதவ், அருண்ராஜ் அப்படி என்ன பேசினாங்களாம்?

அதாவது, “ஆதவ் அர்ஜுனா பேச ஆரம்பிச்சப்பவே புஸ்ஸியைத்தான் டார்கெட் பண்றாருன்னு எங்க எல்லோருக்கும் புரிஞ்சுடுச்சு. சீட்டுக்கு கோடிக்கணக்குல பணம் வாங்கிட்டு இருக்காங்கன்னு பத்திரிகைகளில்ல நியூஸ் வந்துகிட்டு இருக்கு. இதெல்லாம் ரொம்ப தப்பு.. வேட்பாளர் யாருன்னு தளபதிதான் முடிவெடுப்பாரு.. நம்ம கட்சியில பதவிக்கோ, எம்.எல்.ஏ. சீட்டுக்கோ யாரும் பணம் கேட்கவே இல்லை.. கேட்கவும் கூடாது..

அதே மாதிரி மூத்த தலைவர்களோட சேர்ந்து செல்ஃபி எடுக்கிறது கூட பிடிக்கலைன்னு தலைமை கழகத்துல இருந்து சொல்லி இருக்காங்கன்னு நியூஸ் வந்துச்சு.. அதெல்லாம் இல்லை.. நீங்க சுதந்திரமா செயல்படுங்க..

ஆனா நாங்க போனடிச்சா மா.செ.க்கள் முதல்ல அட்டன் பண்ணுங்க.. என்னன்னு கேளுங்க.. பல பேரு போனே எடுக்காம இருந்தா எப்படி கட்சியை ரன் பண்ண முடியும்? யோசிக்க வேணாமா? நாங்கதான்னு இல்லை.. சாதாரண தொண்டன் போனடிச்சாலும் போன் எடுங்க. வாரம் வாரம் உங்க ஒர்க்கை பத்தின ரிப்போர்ட் எங்களுக்கு வந்தாகனும்னு சொல்லிகிட்டே திடீர்னு ‘நம்ம கட்சியில புஸ்ஸி ஆனந்த் கோஷ்டி, ஆதவ் கோஷ்டி, அருண்ராஜ் கோஷ்டி, ஜான் கோஷ்டின்னு எதுவுமே இல்லை.. எல்லாமே தளபதியை சிஎம் ஆக்குற கோஷ்டின்னு மனசுல வெச்சுகிட்டு செயல்படுங்க”ன்னு போட்டுடைச்சாரு..

அப்ப, புஸ்ஸி ஆனந்தின் வலதும் இடதுமா என் பக்கத்துல இருந்தவரு ’சவுண்டு விடப் போறேன்.. எதுக்கு ’அண்ணனை அட்டாக்? செய்யுறாரு’ன்னு’ டென்ஷனாகிட்டாரு.. நான்தான் கண்ட்ரோல் பண்ணி வெச்சேன்” என்றார் அந்த மாநில நிர்வாகி.

ஓஹோ.. ”ஆதவ்வின் கலகம் நன்மையில் முடிவதாக” அடுத்து?

அதே மாதிரி அருண்ராஜூம் பேசுனாராம், “புதுச்சேரி மீட்டிங்குக்கு நான் போனேன்.. அப்ப பாஸ் கொண்டு போகலை.. அங்க இருந்துகிட்டு புஸ்ஸிக்கு போனடிச்சேன்.. அவர் என் நம்பரை பார்த்தும் போனை அட்டண்ட் பண்ணலை… Sir கூட ரெகுலரா பேசுற எனக்கே இந்த நிலைமைன்னா நான் என்ன சொல்றது”ன்னு நேரடியாகவே புஸ்ஸியை தாக்கிப் பேச, அங்கொன்றும் இங்கொன்றுமாக புஸ்ஸிக்கு ஆதரவாக சலசலப்பு சவுண்டு கேட்டுச்சு”ங்கிறார் தவெக மாநில நிர்வாகி.

அப்ப புஸ்ஸி ஆனந்த் என்ன சொன்னாராம்?

புஸ்ஸி ஆனந்தையே சுற்றி வரக் கூடிய நிர்வாகி ஒருவர் நம் கண்ணில்பட அவரிடம் அண்ணன் என்ன பேசினாரு எனக் கேட்க, என்னமோ தெரியலை ரொம்ப டென்ஷனாத்தான் மைக் பிடிச்சாரு.. எடுத்த எடுப்பிலேயே, “இங்க யாருகிட்டயும் பண்ம் வாங்கிட்டு கட்சி பதவி தந்ததே கிடையாது; கெட்ட பேரை உருவாக்கிவிடனும்தான் சில பேர் இப்படி தப்பு தப்பா சொல்றாங்க.. எம்.எல்.ஏ. சீட்டுக்கு பணம் வாங்கினாங்கன்னு சும்மா வேணும்னே கிளப்பிவிடுறாங்க.. மா.செ.க்கள் முதல்ல போனை எடுங்கப்பா.. இனிமேல் மா.செ.க்கள் போனை எடுக்கவே இல்லைன்னு கம்ப்ளெயிண்ட் வரவே கூடாது.. கொங்கு மண்டலத்துல அத்தனை நிர்வாகிகளும் அண்ணன் செங்கோட்டையனுக்கு ஒத்துழைப்பு தரனும். அவர் கேட்கிறதுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுங்க.. வாக்காளர் பட்டியல் வேலையை கவனமா பாருங்க”ன்னு பபடன்னு பட்டாசு மாதிரி வெடிச்சுட்டு, “மக்கள் மன்றத்துல இருந்து கட்சிக்கு வந்தவங்களை மேடை ஏத்த முடியலையேன்னு வருத்தப் பட்டாரு அண்ணன்.. தலைவரை முதல்வராக்கனும்.. கூட்டணி எல்லாத்தையும் தலைவரே பார்த்துக்குவாருன்னும் சொல்லி முடிச்சாரு” என்றனர்.

ரொம்ப ‘ஜனநாயகமாக’ நடந்துச்சு போல.. ஜான் ஆரோக்கியசாமி பேசுனதை பத்தி எல்லோரும் சொல்றாங்களே அது என்னய்யா?

அதை ஏய்யா கேட்குறீரு.. ஜான் ஆரோக்கியசாமி ரொம்ப டீட்டெய்லா பேசுனாரேன்னு ஒரு தவெக நிர்வாகிட்ட கேட்டா, ‘என்னமோ படம் போட்டு காண்பிச்சாரு’ன்னு ஒரே வரியில முடிச்சுட்டு போயிட்டாரு.. அப்புறமாக நாலைஞ்ச் பேருகிட்ட பேசுனதுலதான் ஒரு தென் மாவட்ட நிர்வாகி விளக்கமா சொன்னாரு..

“இந்த கூட்டத்துல ஜான் ஆரோக்கியசாமி ரொம்ப நேரம் பேசுனாரு.. ஆரம்பிக்கும் போதே, ஏகப்பட்ட சர்வே, ரிப்போர்ட்டு எல்லாம் எடுத்து பார்த்துகிட்டே இருக்கோம்.. Sir-க்கும் வந்துருக்கு.. நூற்றுக்கணக்கான பேரை பீல்டு இறக்கிதான் இத்தனை ரிப்போர்ட்டு எல்லாம் எடுத்திருக்கோம்.. பொதுவா சொல்லனும்னா நமக்கு எல்லாமே சாதகமா இருக்கு.. இந்த ரிசல்ட்டை எல்லாத்தையும் வேற சில ரிப்போர்ட்டை வெச்சும் செக் செஞ்சுட்டோம்.. எல்லாமே ஒரே மாதிரி நமக்குதான் வெற்றின்னு சொல்லுது..Sir முதல்வராவது உறுதின்னு சொல்லுது..

இப்பவே இப்படித்தான் ரிசல்ட்.. இன்னும் நம்ம கூட்டணிக்கு காங்கிரஸ் வர இருக்குது.. அப்படியே விசிகவும் கூட வந்துரும்.. அப்படி மெகா கூட்டணி அமைஞ்சதுன்னா எப்படி ரிசல்ட் இருக்கும்னு பார்த்துக்குங்க.. “ன்னு சொல்லிட்டு சிலைடு ஷோ போட்டாரு..

அதுல, இப்போதைக்கு கூட்டணியே இல்லாம சோலோவா தேர்தலை சந்திச்சாலும் நாங்க 31% ஓட்டு வாங்குவோம்; திமுகவை விட 2, 3 பெர்சண்டேஜ் கூடத்தான் எங்களுக்கு வருது.. அதிமுக எல்லாம் பின்னாடிதான்.. அதனாலதான் எங்களுக்கும் திமுகவுக்கும் போட்டின்னு தளபதி சொல்றாரு.. இந்த எலக்‌ஷன்ல சீமானுக்கு செம்ம அடி விழுதாம்.. அவரு இந்த முறை 2, 2.5% ஓட்டுதான் வாங்குவாராம்..

பெண்கள் மத்தியிலதான் எங்களுக்கு செம்ம செல்வாக்கு இருக்குன்னு சர்வேயில சொல்லி இருந்தாங்க.. 40%-க்கும் மேல பெண்கள் சப்போர்ட் எங்களுக்கு இருக்கா.. 1,000 ரூபாய் பணம் கொடுத்தும் திமுகவுக்கு எங்களவிட 15-20% கம்மிதான் பெண்கள் சப்போர்ட்டாம்..

சிஎம் கேண்டிடேட் யாருன்னு பார்த்தா ஸ்டாலினுக்கும் எங்களுக்கும் ஜஸ்ட் 1 பெர்சண்டேஜ்தான் டிப்பிரன்ஸ்..

அதுலயும் கிறிஸ்டியன் ஓட்டுல 80% எங்களுக்கு மட்டும்தான் கிடைக்கப் போகுதாம்.. முஸ்லிம்ஸ் ஓட்டுலயும் 40% நாங்க வாங்குவோம்னு ஜான் காண்பிச்ச சிலைடு ஷோவுல சொல்லி இருக்கு..

டிசைடிங் பேக்டரா 7% பேரு எந்த முடிவும் எடுக்காமலே இருக்காங்களாம்… ஜான் கொடுத்த ரிப்போர்ட் விவரங்களை முழுசா வேறு ஒரு நோட்ல குறிச்சு வெச்சிருக்கேன்.. இந்த டீட்டெய்ல் போதுமே.. சோசியல் மீடியாவுல விளையாடுவோமே.. நாங்க ‘தீயா’ வேலை செய்யுறோம்.. எங்க தளபதியை ‘சிஎம்’ ஆக்கிடுவோம்”னு குஷியாகிட்டாரு..

புதுவரவு செங்கோட்டையன் என்ன பேசுனாராம்?

செங்ஸைப் பொறுத்தவரைக்கும், “எனக்கு ம் இந்த ரிப்போர்ட்டு எல்லாம் போட்டு காண்பிச்சுக்காங்க.. ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கு.. என்னதான் ரிப்போர்ட்டுகள் இருந்தாலும் கிரவுண்ட்ல பீல்டு ஒர்க் ரொம்ப முக்கியம்.. மக்கள்கிட்ட போய் நாம பேசனும்.. மக்களை சந்திக்கிற பாயிண்டுகளை போட்டு பேசனும்.. ஈரோட்டுல விஜய் வருகையை மக்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்துகிட்டிருக்காங்க… ஈரோடு கூட்டத்தை பிரம்மாண்டமாக செஞ்சு காட்டனும்.. அதே மாதிரி நம்ம தவெக இன்னொரு அதிமுகவாக மாறப் போகுது.. அதிமுகவுல இருந்து அடுத்த மாசத்துல ஏகப்பட்ட தலைவர்கள் இங்க வரப்போறாங்கன்னு.. நிறைய பேரு என்கிட்ட பேசுகிட்டு இருக்காங்க” என கொளுத்திப் போட்டதாக நிர்வாகி ஒருவர் ஷேர் செஞ்சாரு..

அதே நேரத்துல நாம பேசுன மாநில நிர்வாகிகளில்ல ஒருத்தரு ரொம்பவே முகத்தை இறுக்கமா வெச்சுகிட்டு, “உண்மையை சொல்லனும்னா இந்த டேட்டா, சர்வே, ரிப்போர்ட்டு எல்லாமே தளபதியை ஏமாத்துறதுக்கு சார்.. கிரவுண்ட்ல நிலவரமே வேற மாதிரி இருக்கு.. இவங்க சொல்ற மாதிரி எதுவுமே இல்லைங்கிறதுதான் உண்மையுங்கூட.. இந்த ரிப்போர்ட்டுல எல்லாம் பார்த்துட்டு இப்பவே சிஎம் ஆன மாதிரி தளபதி நினைக்கிறாரு.. நெஜமாகவே அவரு ஏமாந்துகிட்டாரு..அது எப்ப தளபதிக்கு புரியுமோ?” என குண்டை வீசியதை சொல்லியபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share