வைஃபை ஆன் செய்ததும், ”நினைப்பது எல்லாம் நடநதுவிட்டால்..” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..
என்னய்யா தொகுதி பங்கீடு செம்ம ஜோரா நடக்குதா?
திமுக கூட்டணியில பிப். 22-ந் தேதி தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை தொடங்குச்சு.. பிப்ரவரி 28-ந் தேதி தொகுதிகள எண்ணிக்கை முடிவு செஞ்சு அறிவிப்பும் வர ஆரம்பிச்சிடுச்சு..
திமுக கூட்டணியில இருக்கிற பெரும்பாலான கட்சிகள் அறிவாலயத்துக்கு வந்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்திட்டாங்க..
ரொம்பவே மல்லுக்கட்டிகிட்டு இருந்த காங்கிரஸ் டீமும் நேத்து அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திட்டு போயிருக்கு..

இப்ப முஸ்லிம் லீக், மமகவுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கி இருக்குது திமுக..
முஸ்லிம் லீக் கட்சிக்கு போன முறை வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர்னு 3 சீட் கொடுத்தது திமுக.. இந்த மூன்றிலுமே ஏணி சின்னத்துலதான் முஸ்லிம் லீக் போட்டியிட்டுச்சு.. ஆனா எந்த தொகுதியிலுமே ஜெயிக்கலை..
இதை பத்தி முஸ்லிம் லீக் தரப்புல விசாரிச்சப்ப, “அமைச்சர் எ.வ.வேலுதான் காதர் மொகிதீனுடன் ஒரு மாசமா பேச்சுவார்த்தை நடத்தினாரு..நாங்க 5 சீட் கொடுங்கன்னு கேட்டோம்.. ஆனா, ” போன டைம் 3 சீட் கொடுத்து மூணுலயும் ஜெயிக்கலை.. இந்த முறை தேமுதிக, கமல் மநீம எல்லாம் கூட்டணிக்குள்ள புதுசா வந்திருக்காங்க.. அதனால இந்த டைம் 1 சீட் வாங்கிக்கங்க”ன்னு சொன்னாரு எ.வ.வேலு.. நாங்க ”2 தொகுதிகள் கொடுங்க.. அதுவும் நாங்க கேட்கிற தொகுதிகளை கொடுங்கன்னு”ன்னு கேட்டு பேசினோம்.. அதே மாதிரி, “2 தொகுதிகளிலேயும் எங்க ஏணி சின்னத்துலதான் நிப்போம்”னும் சொல்லி இருந்தோம்… இப்ப 2 சீட் கொடுத்திருக்காங்க.. “ என்றனர்.
திமுக தரப்புல பேசுனப்ப, “முஸ்லிம் லீக்குக்கு போன முறை 3 சீட் கொடுத்தும் ஜெயிக்கலை.. அதனால சீட்டை குறைச்சுக்க சொன்னோம்.. அவங்க 2 தொகுதிகள் கேட்டாங்க.. அதோட எந்தெந்த தொகுதிகள் வேணும்னும் லிஸ்ட் கொடுத்திருத்தாங்க.. நாங்க சரின்னு சொல்லி 2 சீட் கொடுத்திருக்கோம்.” என்றனர்.
திமுக கூட்டணிக்கு புதுசா வந்திருக்கிற எஸ்டிபிஐ கட்சிக்கு 1 சீட் கொடுக்க இருக்காங்களாம்.. வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர்.. இந்த 3-ல 1 தொகுதியை எஸ்டிபிஐக்கு திமுக கொடுக்கலாம்னு யோசிக்குதாம்..

ஓஹோ.. மமகவுக்கும் 2 சீட் கொடுத்திருக்காங்களே..
ஆமாய்யா.. போன முறை மமகவுக்கு மணப்பாறை, பாபநாசம்னு 2 தொகுதிகள் கொடுத்தது திமுக.. இதுல பாபநாசத்துல ஜவாஹிருல்லாவும் மணப்பாறையில அப்துல் சமதும் உதயசூரியன் சின்னத்துல போட்டியிட்டு ஜெயிச்சாங்க.. போட்டியிட்ட 2 தொகுதிகளிலேயும் ஜெயிச்சுட்டதால இந்த டைம் 5 தொகுதிகளை கேட்டிருந்தது மமக.. அதோட தனிச்சின்னத்துல போட்டியிட போறோம்னும் சொல்லி இருந்தாங்க..
திமுக தரப்புல, “இந்த முறையும் உதயசூரியன் சின்னத்துல நிற்கிறதா இருந்தா 2 சீட் கொடுக்கலாம்”னு சொல்லி இருக்காங்க.. மமகவும், “சரி”ன்னு 2 சீட்டை வாங்கிட்டு இந்த முறையும் உதயசூரியன் சின்னத்துல போட்டியிடுறோம்னு சொல்லி இருக்காங்க..
மதிமுக டபுள் டிஜிட் கேட்கிறாங்களே?
மதிமுகவுக்கு திமுக கூட்டணியில போன டைம் , மதுராந்தகம்(தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர்(தனி), அரியலூர்னு மொத்தம் 6 சீட் கொடுத்தாங்க.. 6 தொகுதிகளிலேயும் உதயசூரியன் சின்னத்துலதான் மதிமுக போட்டி போட்டுச்சு.. இதுல மதுராந்தகத்துல மல்லை சத்யா, பல்லடத்துல முத்துரத்தினம் 2 பேரும் தோத்துட்டாங்க.. 4 சீட் ஜெயிச்சது மதிமுக..
இதனால இந்த டைம் திமுககிட்ட மதிமுக, ”எங்க கட்சிக்கு அங்கீகாரம் பெறனும்னா 12 இடத்துல போட்டியிட்டாகனும்.. அதனால 12 சீட் கொடுங்க.. போன டைம் திருச்சி லோக்சபா தொகுதியில தீப்பெட்டிச் சின்னத்துல துரை வைகோ போட்டியிட்டு ஜெயிச்சாரு.. அதனால இந்த டைம் எங்க தனிச்சின்னத்துல நாங்க போட்டி போடுறோம்”னு சொல்லி இருந்ததாங்க.
இதுக்கு திமுக சைடுல இருந்து, “நாங்க உட்பட எல்லா கட்சிகளும் சீட்டை குறைக்கிற நிலைமைதான்.. இருந்தாலும் போன டைம் வாங்குன மாதிரி 6 சீட்டை நாங்க கொடுத்தா நீங்க உறுதியா ஜெயிக்கிற தொகுதியில உங்க சின்னத்துல நில்லுங்க.. டஃப் பைட் இருக்கும்னு நினைக்கிற தொகுதியில உதய சூரியன் சின்னத்துல போட்டி போடுங்க… 2019 லோக்சபா எலக்ஷன்ல விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் 2 சீட் கொடுத்தோம்.. விழுப்புரத்துல ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்துல நின்னாரு.. சிதம்பரத்துல திருமாவளவன் பானை சின்னத்துல போட்டியிட்டாரு.. திருமாவளவன் வெறும் 3,219 ஓட்டுல போராடி ஜெயிச்சாரு.. ஆனா உதயசூரியன் சின்னத்துல போட்டியிட்ட ரவிக்குமார், பாமகவோட வடிவேல் ராவணனை 1,28,068 ஓட்டுல ஜெயிச்சாரு… அதனால நீங்க டஃப்பா இருக்கும்னு நினைக்கிற தொகுதிகளில்ல உதயசூரியனில போட்டியிடுங்க”ன்னு ஒரு ஆப்ஷன் கொடுத்திருக்காங்க..
இதுக்கு மதிமுக, “இல்லைங்க.. நாங்க தனிச்சின்னத்துல நிக்கிறதா இருக்கோம்.. கட்சிக்கு அங்கீகாரம் வாங்கனும்னா 12 சீட்டுல போட்டியிட்டாகனும்”னு பதில் சொல்லி இருக்காங்க..
மதிமுகவை பொறுத்தவரைக்கும் போன முறை மாதிரியே 6 சீட் கொடுத்தாங்கன்னா வைகோவுக்காக 1 ராஜ்யசபா சீட் கேட்கலாம்னு யோசிக்கிறதாம்..
சரி.. விசிக இன்னும் பேச்சுவார்த்தைக்கே போகலையே?
ஆமாய்யா.. விசிக நாளைக்கு மார்ச் 2-ந் தேதி அறிவாலயத்துல பேச்சுவார்த்தைக்கு போறாங்க.. விசிகவுக்கு போன முறை வானூர், அரக்கோணம், காட்டுமன்னார் கோவில், திருப்போரூர், நாகப்பட்டினம், செய்யூர்னு 6 தொகுதிகளை திமுக கொடுத்துச்சு.. இந்த 6 இடத்துலேயும் பானை சின்னத்துல போட்டி போட்டது விசிக.. வானூரில வன்னி அரசும் அரக்கோணத்துல கவுதம் சன்னாவும்தான் ஜெயிக்கலை.. மத்த 4 சீட்டுல விசிக ஜெயிச்சுருச்சு.. அதுல நாகையும் திருப்போரும் பொதுத் தொகுதிகள்..
இந்த முறை விசிக15 சீட் கேட்கிறாங்க.. ”2001-ல் நாங்க வளர்ந்துகிட்ட இருக்கிற நேரத்துலேயே கலைஞர் தமிழ்நாட்டுக்கு 10; புதுச்சேரிக்கு 2 சீட்டுன்னு கொடுத்தாரு..
இப்ப எங்க கட்சி வளர்ந்திருக்கு.. எங்களுக்கு அதிகமான வாக்காளர்கள் இருக்காங்க.. அதனால கூடுதல் சீட் கொடுங்க.. 2021-ல் போட்டியிட்ட 6 தொகுதியிலேயும் பானை சின்னத்துலதான் நின்னோம்.. அதுல 4 ஜெயிச்சோம்.. வானூர் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் லோக்கல் பாலிட்டிக்ஸ்ல புஸ்பராஜை காலி செய்யுறதுக்காக பொன்முடிதான் எங்களுக்கு தள்ளிவிட்டாரு… அந்த தொகுதியில லோக்கல் பாலிட்டிக்ஸ் இருந்ததால எங்களால ஜெயிக்க முடியலை.. அதனால இந்த டைம் கூடுதலா சீட் கொடுங்க.. இந்த முறையும்
தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்”னு சொல்லி இருக்காங்க..
அதோட, “இப்ப புதுசா கூட்டணிக்கு வந்த தேமுதிகவுக்கு 10 தொகுதி, 1 ராஜ்யசபா சீட் தரும் போது எங்களுக்கும் கூடுதல் சீட் தரலாம்தானே..”ன்னும் விசிக தரப்புல கேட்கிறாங்க..
ஆனா திமுக என்னா சொல்லி இருக்குன்னா, “தேமுதிக கூட்டணிக்கு வந்திருக்கிறது பத்தி கால்குலேஷன் பண்ணாதீங்க.. கூட்டணியில இருக்கிற கட்சிகளை வைச்சு பேசுவோம்.. அதே மாதிரி, விசிகவோட வோட்டர்ஸ்ல கணிசமான இளைஞர்கள், விஜய் பக்கம் போயிட்டாங்களே.. அதனால வோட்டர்ஸ் அதிகமாகி இருக்குன்னு எப்படி சொல்ல முடியும்?”னு கேட்டிருக்கு..
இதுக்கு விசிக தரப்புல, “விஜய்யை ஆதரிக்கிறது எங்க விசிக இளைஞர்கள் மட்டுமல்ல.. பொதுவா இளைஞர்கள் ஆதரிக்கிறாங்க.. அதுல எல்லா கட்சி இளைஞர்களும்தானே இருக்காங்க” என பதில் தந்திருக்காங்க..
இப்போதைக்கு, ”விசிகவுக்கு 8 தொகுதிகளை கொடுக்கலாம்னு திமுக யோசிக்குது.. ரொம்ப அழுத்துனா 2028-ல் ராஜ்யசபா தேர்தல் நடக்கும் போது 1 சீட் கொடுக்கலாம் அப்படிங்கிறதும் திமுகவோட ப்ளான்” ன்னு சொல்றாங்க..
சரிய்யா.. அறிவாலயத்துல பேசிட்டு டெல்லிக்கு போனாரே கிரிஷ் சோடங்கர்.. ராகுல் கிட்ட ரிப்போர்ட் கொடுத்துட்டாரா?
அதெல்லாம் கொடுக்காமலா? அவரு ராகுல் காந்திகிட்ட என்ன கொடுத்தாருன்னு சொல்றதுக்கு முன்னாடி அறிவாலயத்துல காங்கிரஸ் பேச்சுவார்த்தையப்ப ‘சம்பவங்கள்’ நடந்திருக்கு அதை சொல்றேன்..
அறிவாலயத்துக்கு காங்கிரஸ் கட்சியில இருந்து கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் போனாங்க.. டிஆர் பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவோட முதல்ல பேசுனது செல்வப்பெருந்தகை..
செல்வப்பெருந்தகைதான் திமுக குழுகிட்ட டிமாண்ட்ஸ் முன்வைச்சாரு.. அதை அப்படியே கிரிஷ் சோடங்கர்கிட்ட சொன்னாரு.. அப்புறமா திமுக சொன்ன பதிலையும் கேட்டு கிரிஷ் சோடங்கர்கிட்ட செல்வப்பெருந்தகையே சொல்லிட்டு இருந்தாரு..
ஒரு கட்டத்துல ராஜேஷ்குமார்தான் கிரிஷ் சோடங்கரும் பேசுவாருன்னு சொல்லி இருக்காரு..
கிரிஷ் சோடங்கரும் ரொம்ப கெத்தா கையில ப்ராஜெக்ட் ரிப்போர்ட் மாதிரி ரிப்போர்ட்ஸை கையில வெச்சுகிட்டு கரகரத்தபடியே பேச ஆரம்பிச்சாராம்..
”காங்கிரஸ் கட்சி அடிமட்டத்துல இருந்து ஜனநாயகத்தை எப்படி எல்லாம் வளர்க்குதுன்னு விவரிச்சாராம்..
அதாவது திமுகவுல கிளை/ பேரூர்/ ஒன்றியம்னு இருக்கிற மாதிரி எங்க காங்கிரஸ் கட்டமைப்பு எப்படி இருக்குன்னு நிறைய சொல்லி இருக்காரு..
இப்படி எல்லாம் பேசிட்டு, “140 வருஷ கட்சி காங்கிரஸ்.. 1967-ல் ஆட்சியை இழந்த பிறகு 2006-ல் ஆட்சியில பங்கேற்கிற வாய்ப்பு கிடைச்சது.. ஆனா அப்ப கலைஞரை தொந்தரவு செய்ய வேணாம்னு சோனியா காந்தி சொல்லிடாங்க.. எங்க கட்சியை வளர்க்கனும்னா எங்களுக்கு 2 அமைச்சர் பதவி கொடுக்கனும்.. உள்ளாட்சி அமைப்புல, கூட்டுறவு சங்கத்துல தேர்தல் நடந்தா 25% இடங்கள் கொடுக்கனும்”னு பேசினாரு..
அதோட, ஒவ்வொரு மாநிலத்துலயும் எப்படி கூட்டணி ஆட்சிகள் நடக்குதுன்னும் ஒரு கம்பேர் ஸ்டடி ரிப்போர்ட்டையும் வாசிச்சாரு கிரிஷ் சோடங்கர்..
10 நிமிஷத்துக்கும் மேல கிரிஷ் சோடங்கர் பேசி முடிச்சுட்டு, தண்ணி எல்லாம் குடிச்சுட்டு, திமுக என்ன பதில் சொல்லுதுன்னு பார்த்திருக்காரு..
அப்ப, திமுக குழுவில் இருந்தவங்க அத்தனை பேருமே கோரஷா, “கூட்டணி ஆட்சி எல்லாம் No.. No.. No.. அது எங்க பாலிசியே இல்லை”ன்னு ஒரே வரியில முடிச்சுட்டாங்க.. அப்புறமா, “நாங்க 75 வருஷ கட்சி.. 50 வருஷத்துக்கு மேல ஆட்சியில இருக்கிற கட்சி.. இங்க தமிழ்நாட்டுல எப்பவுமே கூட்டணி ஆட்சிங்கிறது எல்லாம் கிடையாது.. அதைத்தான் எங்க தலைவர் தெளிவாக சொல்லிட்டாரே”ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க..
அறிவாலயத்துல இருந்து கிளம்பி ஏர்போர்ட்டுக்கு போகும் போது,“நாம இவ்வளவு நேரம் மூச்சு முட்ட பேசி முடிக்கிறோம்.. அதுக்குள்ள ஒரே வார்த்தையில அதெல்லாம் இல்லைன்னு இந்த டீமே பதில் சொல்லிடுச்சு.. ஒரு கர்ட்டஸிக்காவது லீடரை கேட்டு சொல்றோம்னு கூட சொல்லலையே”ன்னு
ரொம்பவே வருத்தப்பட்டாராம் கிரிஷ்.
அதே மூடுல டெல்லிக்குப் போய் ராகுல் காந்திகிட்ட அறிவாலயத்துல நடந்ததை யும் திமுக டீமே பதில் சொல்லி அனுப்பிட்டதையும் ‘கச்சிதமா’ சொல்லிட்டாராம் கிரிஷ்.
இதுக்கு ராகுல் காந்தி, “சரி.. ஏற்கனவே ஆட்சியில பங்கு டிமாண்ட் பத்தி பேசலைன்னு சொல்லிட்டோம்.. இப்ப எத்தனை தொகுதின்னு நம்பர்ஸ்தான் முக்கியம்.. அதுல உறுதியா இருப்போம்.. போன டைமை விட கூடுதலா சீட்ஸ் வாங்க பார்ப்போம்”னு சொல்லி இருக்காரு..
திமுகவும் “மார்ச் 5-ந் தேதி ராஜ்யசபா எலக்ஷன் நாமினேஷன் தாக்கல் முடியுது.. அதுக்குள்ள காங்கிரஸ்கிட்ட இருந்து ரிப்ளை வந்துரும்..”னு எதிர்பார்ப்போட இருக்கு..
இதுக்கு இடையில, 1 ராஜ்யசபா சீட்டை எப்படியாவது வாங்கிடனும்னு திருநாவுக்கரசு, தங்கபாலு போன்றவங்க ரொம்ப டிரை பன்றாங்கய்யா”ன்னு
டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.
