டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ்-க்கு குட்பை.. விஜய்யிடம் கை நீட்டும் பண்ருட்டி.. பனையூர் பங்களா திறக்குமா?

Published On:

| By Mathi

DT Panrutiyar

வைஃபை ஆன் செய்ததும், “அந்திமத்திலும் அரசியல் அபிலாஷைகள்”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. எந்த பெரியவரை பற்றி சொல்றீரு?

ADVERTISEMENT

இன்னைக்கு நிலவரத்துக்கு ரொம்ப சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரன் பத்திதான்.. 88 வயசானாலும் இன்னமும் பாலிட்டிக்ஸ்ல ஆக்டிவ்வா இருக்கனும்னு துடிக்கிறாரு அய்யா..

ஓஹோ.. ஓபிஎஸ் கூடத்தானே இருக்காரு பண்ருட்டியார்?

ADVERTISEMENT

ஓபிஎஸ் கூட இருந்தாருதான்.. ஓபிஎஸ்ஸை தனிக்கட்சி தொடங்க சொல்லி எவ்வளவோ போராடிப் பார்த்தாரு.. அரசியலைவிட்டே ஒதுங்குறேன்னும் சொல்லிப் பார்த்தாரு.. எதுக்குமே ஓபிஎஸ் பிடி கொடுக்கலை..

ஓபிஎஸ்கிட்ட இருந்த எல்லாரும் சிதறி போய்ட்டாங்க.. அதனால பண்ருட்டியாரும் ஓபிஎஸ்ஸை கழற்றிவிட்டுட்டாரு..

ADVERTISEMENT

சரி… இப்ப பண்ருட்டியார் என்ன செய்ய போறாராம்?

பண்ருட்டியாரைப் பொறுத்தவரைக்கும் கடைசி காலத்துலயும் ‘அரசியல்ல’ பேசுபொருளா இருக்கனும்னு நினைக்கிறாரு..

அவருக்கும் திமுக, விஜய்னு ரெண்டு ஆப்ஷன் இருக்கு.. திமுக சைடுல எந்த மூவ்வும் பண்ணாம இருக்காரு..

ஆனா விஜய்கிட்ட மூவ் பண்ணியிருக்காரு பண்ருட்டியார்.. அவரு தரப்புல நாம விசாரிப்ப, “அய்யாவுக்கு விஜய் கூட கூட்டணி சேரலாம்னு யோசனை.. அதனால ஜேசிடி பிரபாகர் மூலமா பேசிகிட்டு இருக்காரு.,.

பண்ருட்டியார் ஏற்கனவே MGR-ன்னு பேரு வர்ற மாதிரி ஒரு கட்சியை பதிவு செஞ்சு வெச்சிருக்கார்.. Movement for Growth and Rights Party (MGR).. அதுதான் MGR கட்சி.. அந்த கட்சி பெயரிலேயே விஜய் கூட கூட்டணி வெச்சுக்கலாம்னும் சொல்லி விட்டிருக்காரு…விஜய் தரப்புல பதில் வரும்னு பண்ருட்டியாரும் காத்திருக்கிறாரு” என்கின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், ”விஜய்யே ஓகே சொன்னாலும் பண்ருட்டியார்கிட்ட யாருமே இல்லையே.. 88 வயதில் பண்ருட்டியாரே போட்டியிடப் போறாரா? அல்லது விஜய்க்கு ஆதரவு என பிரசாரம் மட்டும் செய்ய போறாரா? இப்ப விஜய் கூட கூட்டணியில சேர்ந்துட்டு அப்புறமா MGR கட்சியையே தவெகவுல இணைச்சுட்டு கடைசிகாலத்தை ‘அரசியல் ஆலோசகர்’ ‘அவைத் தலைவர்’னு ஓட்டிடலாம்னு நினைக்கிறாரா?ன்னு ஏகப்பட்ட கேள்விகள் இருக்கேன்னு டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share