டிஜிட்டல் திண்னை: கார்ப்பரேட்டுகள் கன்ட்ரோலில் அன்புமணி- ‘ரத்த பூமியாகும்’ சோசியல் மீடியா!

Published On:

| By Minnambalam Desk

PMK Anbumani

வைஃபை ஆன் செய்த உடனேயே, “அன்புள்ள அப்பா அப்பா யாருமே. உன் போல் இல்லை” என்ற பாடலை வைத்து ஓடிய ‘ரீல்ஸை’ பார்த்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். PMK Anbumani Ramadoss

அப்பா புராணம் என்றாலே அன்புமணி விவகாரம்தானே?

ஆமாம்.. பாமக தலைவர் அன்புமணி, ஜூலை 25-ந் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அன்புமணி பயணம் மேற்கொள்ளும் ஜூலை 25-ந் தேதி அவரது அப்பா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பிறந்த நாள்.

அன்புமணியின் இந்த 100 நாட்கள் பயணமானது, பாமகவின் தேர்தல் பிரசாரம்தான். இப்பவே தேர்தல் களத்தில் குதிக்கும் அன்புமணிக்கு முழுமையாக, பக்கபலமாக நிற்கப் போவது பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம்தானாம். பெங்களூருவில் இருந்து செயல்படும் தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்திடம்தான் அன்புமணி பாமகவின் தேர்தல் பணிகளுக்கான முழு பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்த நிறுவனம் மட்டுமல்லாமல், சோசியல் மீடியா தொடர்பான பணிகளுக்கு மட்டும் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த Madarth என்ற நிறுவனத்துடனும் அன்புமணி ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பிராண்டிங் நிறுவனம்தான் இந்த Madarth. ஏற்கனவே பாமகவில் அதி உச்ச கொதிநிலையில் அப்பா- மகன் சண்டை தொடருகிறது.. இதில் இப்படி முன்னணி பிராண்டிங் நிறுவனத்தை அன்புமணி களமிறக்குவதால் சோசியல் மீடியாவில் ‘எத்தனை தலை உருளுமோ’ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share