டிஜிட்டல் திண்ணை:திமுக- காங்கிரஸ் கூட்டணி? தமிழக நிர்வாகிகளுடன் ராகுல் நடத்திய ’ரகசிய’ ஆலோசனை முடிவு- பரபர தகவல்

Published On:

| By Mathi

TN Delhi Congress Meeting

வைஃபை ஆன் செய்ததும், ”என்னதான் இடிஇடித்தாலும் மழை பொய்த்தது காண்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. கொட்டுற பனி காலத்துல இடி, மழைன்னு சொல்லிகிட்டு?

ADVERTISEMENT

எல்லாம் காங்கிரஸ் டெல்லி மீட்டிங் பத்திதான்.. கூட்டணி ஆட்சி பத்தி அவ்வளவு ஆவேசமா காங்கிரஸ் லீடர்ஸ் பேசிகிட்டு இருந்தாங்க..

நீலகிரிக்கு ராகுல் வந்தப்ப அவருகிட்ட பேசுறதுக்கு ஆ.ராசாவை சிஎம் ஸ்டாலின் அனுப்பி வெச்சாரு.. ராகுலுடன் ஸ்கூல் பங்ஷன்ல ஆ.ராசா கலந்துகிட்டாரு.. அதுக்கு பிறகு, ராகுல் காந்தியிடம் கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லைங்கிற சிஎம் ஸ்டாலின் நிலைப்பாட்டையும் ஆ.ராசா சொல்லிட்டாரு..

ADVERTISEMENT

அப்ப, கிளைமேட் சரியில்லைன்னு பைலட் சொல்றாரு.. நான் கிளம்ப வேண்டியிருக்கு.. நம்ம பிரண்ட்ஸ்கிட்ட நீங்க பேசிடுங்கன்னு ஆ.ராசாகிட்ட ராகுல் சொல்லிட்டாரு..

இதுக்கு பிறகு, ராகுல் சொன்னபடியே கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகையுடன் ஆ.ராசா ரொம்ப நேரம் பேசுனாரு.. அதுலயும்
‘கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையவே கிடையாது’ன்னு சிஎம் ஸ்டாலின் சொல்லிவிட்டதை ஆ.ராசா சொன்னாருன்னு நாம நேத்து பதிவு செஞ்சிருந்தோம் இல்லையா?

ADVERTISEMENT

அந்த நீலகிரி மீட்டிங்குக்கு அப்புறம்தான் டெல்லிக்கு எல்லாம் வாங்கன்னு மேலிடம் அழைச்சது..

ஆமாய்யா.. டெல்லி மீட்டிங்குல யாரெல்லாம் கலந்துகிட்டாங்க? என்ன முடிவு எடுத்தாங்களாம்?

ரொம்ப ஆர்வம்யா உமக்கு..என்ன முடிவுன்னு கடைசியா சொல்றேன்..

இந்த கூட்டத்துல காங்கிரஸ் மாஜி தலைவர்கள், மாஜி சட்டசபை குழு தலைவர்கள், எம்.பி.க்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள்னு 40 பேர் கலந்துகிட்டாங்க.. மீட்டிங்கை நடத்துனது கார்கே, ராகுல் , கேசி வேணுகோபால் மூவரும்தான்..

காங்கிரஸ் லீடர்ஸ் என்ன சொன்னாங்களாம்?

இதைபத்தி டெல்லி மீட்டிங்குல கலந்துகிட்டவங்ககிட்ட பேசுனோம்,.. ” முதல்ல அந்த பெரிய ஹால்ல எல்லாம் ஒன்னா உட்கார்ந்திருந்தோம்.. அதுக்கு அப்புறமாக தனித்தனியாக ஒவ்வொருவரையா முன்னாடி வந்து உட்கார சொல்லி ஒப்பீனியன் கேட்டாங்க.. இண்டர்வியூவுல பதில் சொல்ற மாதிரிதான் இந்த மீட்டிங்கே ஒன் டூ ஒன்னா இருந்துச்சு..

இதுல ப.சிதம்பரம், “திமுகவுடன்தான் கூட்டணி நீடிக்கனும்.. இந்த கூட்டணிதான் இந்தியாவுக்கும் சரி.. தமிழ்நாட்டுக்கும் சரி நல்லது.. திமுகவோட கூட்டணியில இருக்கிறதுதான் நம்பகத்தன்மையாகவும் இருக்கும்… நீண்ட காலத்துக்கும் இருக்கும்.. அதுக்கு மேல வெற்றி கூட்டணியாகவும் இருக்கும்..

எலக்‌ஷனுக்கு 100 நாட்கள்தான் இருக்கு.. இப்ப போய் பவர் ஷேரிங் பத்தி எல்லாம் நாம பேசுறது சரியில்லை.. இதை பத்தி 2 வருஷத்துக்கு முன்னாடியே நாம பேசியிருந்தா இப்ப எல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.. இந்த நேரத்துல பேசினா கிரவுண்டல ஒர்க் பண்றப்ப பிரச்சனை வரும்” என அழுத்தமாக சொன்னாரு.,.

செல்வப்பெருந்தகை பேசுறப்ப, ”திமுக கூட்டணியில ஏன் நாம தொடரனும்னு விளக்கம் கொடுத்தாரு.. விஜய் கட்சியோட கூட்டணி வைக்கனும்னு சொல்றாங்க.. விஜய் கட்சிக்கு பல ஊர்களில் அமைப்புகளே இல்லை.. அவங்களை நம்பி நாம எப்படி கூட்டணி அமைக்க முடியும்? திமுக கூட்டணியில இருந்தாதான் நாம ஜெயிக்க முடியும்.. அதுதான் ஜெயிக்கிற கூட்டணி”ன்னு சொன்னாரு..

அதிகாரத்துல பங்கு தரனும்னு ரொம்ப நாளைக்கு முன்னாடியே திரியை கொளுத்தினவரு சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார்.. அவரு பேசும்போது, “அதிகாரத்துல திமுக பங்கு தரனுதான்.. அப்படி கொடுத்தா நல்லா இருக்கும்தான்.. இருந்தாலும் திமுக கூட்டணியிலதான் நாம இருக்கனும்”னு வெளிப்படையாகவே சொன்னாரு..” என்றனர்.

இதே மாதிரிதான் திருநாவுக்கரசர், தங்கபாலுன்னு மாஜி தலைவர்களும் “திமுக கூட்டணிதான் தொடரனும்னு” சொன்னாங்க

சரிய்யா.. ரொம்ப சவுண்டு கொடுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் எல்லாம் என்ன சொன்னாங்களாம்?

இதை பத்தியும் கேட்டப்ப ”ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம்னு எம்.பிக்கள் பலருமே திமுக கூட்டணியிலதான் தொடரும்னு சொன்னாங்க.. அதே நேரத்துல ஆட்சி அதிகாரத்துல ஷேர் கேட்கனும்னு சொன்னாங்க..

மாணிக்கம் தாகூர், ஆட்சி அதிகாரத்துல பங்கு கேட்கனும்.. அமைச்சரவையில இடம் கேட்கனும்னு ரொம்பவே கறாரா சொன்னாரு..

இந்த மீட்டிங்குல கலந்துகிட்ட 90% பேர் திமுக கூட்டணியிலதான் காங்கிரஸ் நீடிக்கனும்; அப்பதான் ஜெயிக்க முடியும்னு சொன்னாங்க.. ஆனாலும் ”திமுக ஆட்சியில எங்களுக்கு எதுவும் செய்யலை.. அதனால தேர்தலுக்கு முன்னாடியே உள்ளாட்சியில அதிக இடங்கள் தரனும்; வாரிய தலைவர் பதவி மாதிரி நியமன பதவிகளை நமக்கும் கொடுக்க உறுதி செஞ்சுக்கனும்”னு ஆதங்கத்தை கொட்டிட்டாங்க” என்றனர்..

இப்ப சொல்லுமய்யா என்ன முடிவாம்?

எல்லார்கிட்டேயும் கருத்து கேட்டு முடிக்க 3 மணிநேரத்துக்கும் மேலாச்சு.. அப்புறமா பேசுன கார்கே, “கூட்டணியை பத்தி வெளிப்படையாக பலரும் பேசுறீங்க.. இனிமேல யாரும் கூட்டணி பத்தி பேசாதீங்க.. அதை மீறி பேசினா கடும் நடவடிக்கை எடுப்பேன்”ன்னு எச்சரிச்சாரு..

மீட்டிங் முடிஞ்ச உடனே பிரஸ்ஸை பார்த்த செல்வப் பெருந்தகையும் கேசி வேணுகோபாலும், “கூட்டணி பத்தி வெளிப்படையா யாரும் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க”ன்னு ஒரே வாய்ஸில சொன்னாங்க..

நாம விசாரித்த போதும், “ஆமாம் சார்… திமுக கூட்டணியில இருந்தா மட்டுமே ஜெயிக்க முடியும்னுதான் எல்லோருமே நினைக்கிறாங்க.. ஒரு சில காரணங்களுக்காகதான் வேற மாதிரி சிலர் பேசிகிட்டு இருக்காங்க.. திமுகவை விட்டு காங்கிரஸ் போகாதுங்கிறதுதான் டெல்லி மீட்டிங்கோட முடிவு.. அதனாலதான் சென்னையில இன்னைக்கு நடக்க இருந்த பொதுக்குழு கூட்டத்தையும் கூட கேன்சல் செஞ்சுட்டோம்.. டெல்லியில பேசியாச்சு.. இப்ப பொதுக்குழுவை கூட்டுனா அதுல சிலர் வேற மாதிரி பேசுனா நல்லா இருக்காதுன்னு கேன்சல் பண்ணிட்டோம்.. “ என்கின்றனர்.

டெல்லி மீட்டிங் விவரங்களை சிலர் விஜய்க்கு டீட்டெய்லா ரிப்போர்ட் செய்ய அவரோ செம்ம அதிர்ச்சி ஆகிட்டாராம்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share