டிஜிட்டல் திண்ணை: தேமுதிகவின் ‘அந்த’ டிமாண்ட்.. ‘கிறுகிறுத்த’ அதிமுக.. ’வியர்த்து போன’ பாஜக!

Published On:

| By Mathi

AIADMK DMDK DT

வைஃபை ஆன் செய்ததும், ”+1 சரித்திரம் படைக்குமய்யா” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா திடீர்னு +1 கிளாஸ் பத்தி பேசுறீரு?

ADVERTISEMENT

அதுசரி.. நாம எதுக்குய்யா +1 கிளாஸ் பத்தி பேசப் போறோம்.. எல்லா கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில +1-ன்னு ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுறதை சொன்னேன்யா..

எந்த கட்சியெல்லாம் அப்படி கேட்குதாம்?

ADVERTISEMENT

திமுக, அதிமுக இரண்டு கட்சிகள்கிட்ட பேசிகிட்டு இருக்கிறது தேமுதிக.. இதுல அதிமுக சைடுல எஸ்பி வேலுமணிதான் தேமுதிக பிரேமலதாகிட்ட சீரியசாக பேசிகிட்டு இருக்கிறாருன்னு நாம சொல்லி இருந்தோம்..

அடுத்த கட்டமா அதிமுக கிட்ட, 10+1+ மத்திய இணை அமைச்சர் பதவின்னு தேமுதிக டிமாண்ட் வெச்சிருக்காம்யா..

ADVERTISEMENT

இதை பத்தி அதிமுக தரப்புல பேசுனப்ப, “எங்க கூட்டணிக்கு தேமுதிக வரனும்னுதான் பேச்சுவார்த்தை நடத்துறோம்.. அவங்க இப்பவும் ராஜ்யசபா சீட்டுலதான் குறியா இருக்காங்க.. 10 சட்டமன்ற தொகுதி, 1 ராஜ்யசபா சீட், 1 மத்திய இணை அமைச்சர் பதவி கொடுங்கன்னு எங்ககிட்ட கேட்டாங்க..

எங்க சைடுல இருந்து தொகுதிகள் எத்தனைன்னு நாங்க முடிவு செய்யலாம்.. ஆனா மத்திய அமைச்சர் பதவியை பத்தி எல்லாம் நாங்க எப்படி உறுதி சொல்ல முடியும்? அதை பாஜககிட்ட பேசுங்கன்னு சொல்லிட்டோம்” என்கின்றனர்.

விஜயகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, ”அதிமுக எங்களுக்கு போன டைம் ராஜ்யசபா சீட் தராம ஏமாத்திடுச்சு.. இப்ப எங்களுக்கு அது கவுரவ பிரச்சனை.. எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு.. கடலூர் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்தீங்கதானே.. அதனாலதான் மத்திய இணை அமைச்சர் பதவியும் கேட்கிறோம்” என்கின்றனர்.

தேமுதிககிட்ட திமுகவோட மூவ் என்னவாம்?

திமுக இடையில கொஞ்சம் கேப் விட்டு வெச்சிருந்தாங்க.. அதிமுக சீரியசா பேசுறது தெரிஞ்சு திமுகவும் தேமுதிகவோட மறுபடியும் பேச முயற்சிக்கிறாங்க.. ஆனா பிரேமலதா தரப்புல, ”2 நாட்கள் போகட்டும்.. பிறகு சொல்றோம்”னு சொல்லி இருக்காங்க..

அதென்னய்யா 2 நாட்கள் கணக்கு?

வேற ஒன்னுமில்லையாம்.. பியூஷ் கோயல் சென்னையில முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறாரு இல்லையா? அந்த பேச்சுவார்த்தையோட முடிவை தெரிஞ்சுகிட்டு திமுகவுக்கு தகவல் சொல்லுமாம் தேமுதிக..

ஓஹோ.. வேற எந்த கட்சி ராஜ்யசபா சீட் கேட்குதாம்?

அதிமுக- பாஜக கூட்டணியில சேர முடிவு செஞ்சிருக்கிற டிடிவி தினகரன்தான்.. அமமுகவுக்கு 8 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் கேட்கிறாராம் தினகரன்.. அமமுகவுக்கு 6 சீட் கொடுத்தாவே போதும்னு நினைக்குதாம் பாஜக..

ஏற்கனவே அதிமுக கூட்டணியில அன்புமணி பாமகவும் ராஜ்யசா சீட் கேட்டிருந்தது.. அன்புமணிக்கு 18+1 ராஜ்யசபா சீட் தரலாம்னு யோசனையில் இருக்காம் அதிமுக என்றபடி டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்கு போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share