டிஜிட்டல் திண்ணை: புதுச்சேரியிலும் காங்கிரஸ் பிடிவாதம்! திமுக சொல்லும் கணக்கு என்ன?

Published On:

| By Mathi

DT Puducherry DMK COngress

வைஃபை ஆன் செய்ததும், “பாண்டியிலும் பலத்த புயலடிக்குது” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. வெயில் வெளுக்குது,, புயல் அடிக்குதா?

ADVERTISEMENT

யோவ்.. அரசியல் புயல். இங்க மாதிரியே அங்கேயும் அடிக்குதுய்யா..

புதுச்சேரியில பாஜக கூட்டணியில என்.ஆர். காங்கிரஸுக்கு 16 சீட் வாங்கிட்டாரு ரங்கசாமி.. பாஜக 10 எடுத்துகிச்சு..

ADVERTISEMENT

அதிமுகவுக்கு 2 சீட்தான் கொடுத்திருக்காங்க.. மார்ட்டின் மகன் கட்சிக்கும் 2 சீட்தான்..

2 முறை பாண்டிச்சேரியை ஆண்ட அதிமுகவுக்கு 2 சீட்.. 2 மாசத்துக்கு முன்னாடி கட்சி தொடங்குன மார்ட்டின் மகன் கட்சிக்கு 2 சீட்.. அப்படிங்கிறதால அதிமுகவுல ரொம்ப கோபமாம்யா..

ADVERTISEMENT

திமுக கூட்டணியில, காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கமும் திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனும்தான் பேச்சுவார்த்தை நடத்துறாங்க..

இதை பத்தி விசாரிச்சப்ப, “காங்கிரஸ் கட்சி தரப்புல திமுகவும் காங்கிரஸும் ஆளுக்கு 15 சீட் பிரிச்சுக்கலாம்”னு சொல்றாங்க..

திமுகவோ, ”ஆளுக்கு 14 சீட்னு பிரிச்சுக்கலாம்.. மிச்சம் 2 சீட் இருக்குது.. அதுல ஒன்னை விசிகவுக்கும் இன்னொரு சீட்டை சிபிஐ-க்கும் கொடுக்கலாம்”னு சொல்றாங்க..

இதை காங்கிரஸ் ஏத்துக்காம, “நாங்கதான் கூட்டணிக்கு தலைமை.. உங்கலைவிட ஒரு சீட்டாவது எங்களுக்கு அதிகமா வேணும்”னு சொல்லுது..

ஆனா திமுகவோ, “ போன டைம் இதே மாதிரி சீட் வாங்குனீங்க.. கடைசியில ஒரு தொகுதியில நிறுத்துறதுக்கு கூட வேட்பாளர் இல்லாம போயிருச்சு.. அப்ப போட்டியிட்ட 9 பேர் இப்ப பாஜகவுல இருக்காங்க.. கடைசியில 2 சீட்தான் ஜெயிச்சீங்க.. இப்பவும் ஆள் இல்லைதானே.. அதனால ரியாலிட்டியாக முடிவெடுக்கனும்”னு சொல்லி இருக்காங்க..

இதை பத்தி வைத்திலிங்கத்துகிட்ட ஜெகத்ரட்சகன் பேசுனப்ப, “நாங்க சுமூகமாக முடிக்கலாம்னு நினைக்கிறோம்… எங்க அகில இந்திய தலைமை சொல்லனுமே.. இன்னைக்கு கிரிஷ் சோடங்கர் வர்றாரு.. பேசுவோம்”னு வைத்தி சொன்னாரு..

புதுச்சேரியில ஜரூரா நடக்குற பேச்சுவார்த்தைகளை பார்த்தா எல்லாம் சுமூகமா முடிஞ்சிரும் போலதான் இருக்குய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share