ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: பாமகவில் இன்று கிளைமாக்ஸ்? முடிவுக்கு வரும் ராமதாஸ்- அன்புமணி மோதல்?

Published On:

| By Minnambalam Desk

PMK Ramadoss Anbumani

வைஃபை ஆன் செய்ததும் “என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி” பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

புரிகிறது.. அப்பா- மகன் சண்டையில் அடுத்த கட்டமா?

ADVERTISEMENT

ஆமாம்.. எதிர்பாராத திருப்பங்களை நோக்கி என சொல்லலாம்..

அப்படி என்னதான் நடக்கிறது?

ADVERTISEMENT

தமிழக அரசியல் நிலவரம் பற்றிய IB ரிப்போர்ட் அடிப்படையில்தான் அண்மையில் நெல்லையில் அமித்ஷாவின் பேச்சு இருந்தது. அமித்ஷாவின் இந்த பயணத்துக்கு பிறகு பாஜக தலைவர்கள், ‘கூட்டணியை’ ஒழுங்கு செய்யும் வேலைகளில் தீவிரம் காட்டுகின்றனர்.

பாமக தலைவர் அன்புமணியை தொடர்பு கொண்ட அமித்ஷாவுக்கு நெருக்கமான டெல்லி பாஜக மேலிட பிரமுகர்கள், “எங்க கூட்டணியில் பாமக இடம் பெறுவதை வரவேற்கிறோம்.. சந்தோஷம்தான்.. ஆனால் அப்பா ராமதாஸுடன் இருக்கிற பிரச்சனைகளை முடித்துவிட்டால் நல்லா இருக்குமே.. பாமக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருப்பதுதானே நம்ம கூட்டணிக்கு முக்கியம் இல்லையா? அதனால அப்பாவுடன் சமாதனமாக போகிற முயற்சிகளை எடுங்க.. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என சொல்லி இருக்கின்றனர்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து தாயார் சரஸ்வதி அம்மாளை தொடர்பு கொண்டு , “அப்பாவுடன் சமாதானமாக போவதையே டெல்லி பாஜக மேலிடம் விரும்புகிறது..
அப்பாவிடம் மறுபடியும் பேசுங்க அம்மா.. பிரச்சனையை பேசி தீர்க்க வழியைப் பார்ப்போம்” என்றாராம் அன்புமணி.

இந்த நிலையில் இன்னொரு சம்பவமும் ராமதாஸ் குடும்பத்தில் நடந்துவிட்டது.

அது என்ன சம்பவமப்பா?

டாக்டர் ராமதாஸுடன் நீண்டகாலமாக இணைத்து பேசப்பட்டவர் செவிலியர் சுசீலா. இந்த சுசீலாவை மையமாக வைத்துதான் அப்பா- மகன் இடையேயான மோதலே வெடித்ததாக தைலாபுரம் வட்டாரங்கள் கூறிவந்தன. நாகரீகம் கருதி எல்லோரும் இந்த விவகாரத்தை இலை மறை காயாகவே பேசிவந்தனர்.

இதுவரை சுசீலாவுடனான உறவை ராமதாஸ் வெளிப்படையாக காட்டிக் கொண்டதும் இல்லை. அதனால் ‘கமுக்கமான’ விவகாரமாகத்தான் இருந்தது.

ஆனால் அண்மையில் மாமல்லபுரத்தில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான “கால்டன் சமுத்திரா”வில் சுசீலா-ராமதாஸ் இணையரின் 50-வது திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் பகிரங்கமாக வெளியாகின. இதில் சுசீலாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த சம்பவமும் தைலாபுரத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

அன்புமணி பிரச்சனையுடன் சுசீலா விவகாரமும் தைலாபுரத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பிரளயமாக- படு உக்கிரமாக வெடித்திருக்கிறது.

ராமதாஸிடம் மிக ஆவேசமாக பேசிய அன்புமணி அம்மா சரஸ்வதி, ” எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு எடுக்காமல் போனால் எந்த ஒரு எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போகவும் தயங்கமாட்டேன்” என கடுமையான குரலில் எச்சரித்திருக்கிறார்.

இதனால் பெரும் நெருக்கடிக்குள்ளாகிவிட்ட ராமதாஸ், மகன் அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வருவதாக மனைவி சரஸ்வதி அம்மாளிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

சென்னைக்கு இன்று ஆகஸ்ட் 28-ந் தேதி வரும் ராமதாஸை அழைத்து வரும் சரஸ்வதி அம்மையார், அன்புமணி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனால் வழக்கமாக ராமதாஸ், வியாழக்கிழமையன்று நடத்தும் பிரஸ் மீட் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும், ஏற்கனவே இதேபோல சரஸ்வதி அம்மையார் பேச்சுவார்த்தை நடத்திய போது, கடைசி நேரத்தில், “நானே தலைவர் பதவியில் இருப்பேன்.. இதை அன்புமணி ஏற்றுக் கொண்டால் எனக்கு பிரச்சனை இல்லை” என பல்டி அடித்தார் ராமதாஸ்.

இதனால் சென்னையில் இன்று நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் ராமதாஸ் விட்டுக் கொடுப்பாரா? அல்லது வேதாளம் போல மீண்டும் முருங்கை மரம் ஏறுவாரா டாக்டர் ? என அன்புமணி குடும்பம் தவிப்புடன் காத்திருப்பதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டி ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share