ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ’வெச்சு செஞ்ச சிபிஐ’.. புஸ்ஸி டீம் ‘ஷாக்’.. வசமாக சிக்கிய ‘ஆதவ்’.. பரபர டெல்லி!

Published On:

| By Mathi

Digital Thinnai TVK CBI Delhi

வைஃபை ஆன் செய்ததும், “டெல்லி குளிரிலும் வியர்த்து கொட்டிருச்சாமே’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா.. டெல்லி ‘பீவர்’ ஓயலையா?

ADVERTISEMENT

உமக்கு ரொம்ப அக்கறைதான்யா.. கரூரில 41 பேர் பலியான சம்பவத்துக்காக டெல்லியில 3 நாளாக சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தி இருக்காங்கய்யா..

ம்ம்.. 3-வது நாளான இன்னைக்கு என்ன நடநதுச்சாம்?

ADVERTISEMENT

முதல் 2 நாள் என்ன நடந்துச்சு? யார் என்ன பதில் சொன்னாங்க? புஸ்ஸி ஆனந்த் போட்ட குட்டி தூக்கம் தொடங்கி பரிதவிச்சு போய் விஜய் டெல்லிக்கு போனடிச்சு வரைக்கும் மின்னம்பலத்துல விரிவாக எழுதிட்டோம்..

2 நாளாக நடந்த மாதிரிதான் இன்னைக்கும் விசாரணை இருக்கும்தான் தவெகவின் புஸ்ஸி, ஆதவ், நிர்மல்குமார், மதியழகன் போனாங்க.. ஆனா நடந்ததே வேறயாம்..

ADVERTISEMENT

சிபிஐ அதிகாரிகள் என்ன செஞ்சாங்களாம்?

இன்னைக்கும் சில கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் வழக்கம் போல முதல்ல கேட்டாங்க.. புஸ்ஸி ஆனந்த்கிட்ட, ”நீங்க பொதுச்செயலாளர்தானே.. விஜய்யை சீக்கிரமா கூட்டத்துக்கு வாங்கன்னு போலீஸ் அதிகாரிங்க சொன்னாங்கதானே?” என கேட்க , புஸ்ஸி தடுமாறி இருக்காரு..

அதே மாதிரி ஆதவ் அர்ஜூனாகிட்டயும், “உங்களை போலீஸ் சீக்கிரமா வரச் சொல்லுச்சுதானே..”ன்னு சொல்ல.. அவரோ அசால்ட்டா, “எங்கிட்ட அப்படி எல்லாம் எந்த போலீஸ் அதிகாரியுமே சொல்லலையே”ன்னு பதில் சொன்னாரு..

இதுக்குத்தானய்யா காத்திருந்தோம்னு சிபிஐ ஆபிசர்ஸ், விஜய்யோட பிரசார பஸ்ஸில் இருந்த சிசிவிடி பதிவை போட்டு காண்பிச்சு, “இந்த வீடியோவுல நீங்க போலீஸ் அதிகாரிங்ககிட்ட பேசுறதை பாருங்க.. போலீஸ் ஆபீசர்ஸ் சீக்கிரமா வர சொல்லி இருக்காங்க.. வண்டியையும் வேலுசாமிபுரத்துக்கு முன்னாடி நிப்பாட்ட சொல்லி இருக்காங்க.. நீங்கதான் பஸ்ஸை கூட்டத்துக்குல விடுங்கன்னு சொல்லி இருக்கீங்களே..”ன்னு மடக்க ‘வெலவெலத்து ‘ போனாராம் ஆதவ்..

ஓஹோ.. சிபிஐ அதிகாரிகள் வேற என்ன ‘ஷாக்’ கொடுத்தாங்களாம்?

2 நாட்களாக சகஜமாக பேசி பதில்களை வாங்கின சிபிஐ ஆபிசர்ஸ் இன்னைக்கு கொடுத்த ட்ரீட்மெண்ட்டே ‘வேற லெவலில்’ இருந்ததாம்.. அதுல உச்சகட்டம்தான்.. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன்கிட்ட பரீட்சைக்கு கொடுக்கிற மாதிரி ஏகப்பட்ட கொஸ்டின்களை கொடுத்து அதுக்கு எல்லாம் பதில் கொடுங்கன்னு சொல்லி இருக்காங்க.. இவ்வளவு கேள்விகளா? என மலைத்துப் போன தவெக நிர்வாகிகள், “ஆஹா.. நம்மளை டெல்லிக்கு வரவழைச்சு வெச்சு செய்யுதே சிபிஐ”ன்னு நொந்தபடியே சில மணிநேரமாக அந்த கொஸ்டின்களுக்கு தனித்தனியாக பதில் எழுதி கொடுத்துவிட்டு விரக்தியா வெளியே வந்தாங்கன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share