வைஃபை ஆன் செய்ததும், ”என்னமோ நடக்கிறது நடக்கட்டும்” என்ற வசனத்தை சவுண்டாக கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. வாய்ஸ் ஓவரா இருக்கே? எந்த கட்சியோட மேட்டரு?
அதெல்லாம் கரெக்ட்டா சொல்லிடுவீரே.. திமுக- காங்கிரஸ் விவகாரத்தை பத்திதான் விலாவாரியா சொல்லிட்டோம்.. இது அதிமுக- பாஜக ஏரியா..
ஆமாய்யா.. எடப்பாடி டெல்லிக்கு போயிருக்காரே?
தேர்தல் தேதியை அறிவிக்கப் போறாங்க இல்லையா.. அதுக்குள்ள எத்தனை சீட்டு? எந்த தொகுதிகள்னு பைனல் பண்ணிடனும்னு தீவிரமா இருக்காங்க..
இதை பத்தி எடப்பாடிக்கு நெருக்கமானவங்ககிட்ட கேட்டோம்.. அவங்க சொல்றது என்னான்னா, “எங்ககிட்ட பாஜக மொத்தமா 50 சீட் கேட்குது.. அந்த 50 சீட்டுல ஜிகே வாசன், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம்னு எல்லோருக்கும் பிரிச்சு கொடுக்கிறோம்னு சொல்றாங்க..
இதை பத்தி ஏற்கனவே பாஜக சைடுல பேசியிருந்தாலும் பைனல் பண்றதுக்காக எடப்பாடியை டெல்லிக்கு வர சொல்லி இருக்கிறாரு அமித்ஷா.. இதனால டெல்லிக்கு போயிருக்காரு எடப்பாடி” என்கின்றனர்.
பாஜக கேட்கிற 50 சீட்டையுமா கொடுக்கப் போறாரு எடப்பாடின்னு கேட்டதுக்கு, “அதெப்படி கொடுப்பாங்க.. போன டைம் அதிமுக கூட்டணியில பாஜக 20; வாசன் 6 இடத்துல போட்டியிட்டாங்க.. இந்த டைம் அமமுகவுக்கும் சேர்த்து மொத்தமா 30 சீட் தரலாம்னு எடப்பாடி நினைக்கிறாரு..
டெல்லியில அமித்ஷாகிட்டேயும் 30 சீட் கொடுக்கிறோம்னு எடப்பாடி சொல்ல போறாரு.. பாஜக மேலிடம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்” என சொல்வதாக டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
