டிஜிட்டல் திண்ணை: கேசவ விநாயகம் பதவி பறிப்பு- குஷியில், நயினார் கேடிஆர்.. சீறிய அண்ணாமலை- நடந்தது என்ன?

Published On:

| By Mathi

Kesava Vinayagam DT

வைஃபை ஆன் செய்ததும், “சங்”கத்தை பத்திதான் இப்ப ஊரே பேசுது” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. எலக்‌ஷன் நேரத்துல சங்கத்தை பத்தி பேசுறீரு?

ADVERTISEMENT

நான் சொல்றது ‘சங்’ பரிவாரத்தை.. பாஜகவோட தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பத்திதான்..

ஓஹோ.. கேசவ விநாயகம் மேட்டரா? ஏன் அவரு பதவியை பறிச்சுட்டாங்களாம்?

ADVERTISEMENT

அதைத்தான் சொல்லப் போறேன்.. பாஜகவை ஆர்.எஸ்.எஸ். கண்ட்ரோல் பண்றதே ‘அமைப்பு செயலாளர்’ பதவி மூலமாதான்.. ஒவ்வொரு மாநில பாஜகவிலும் அமைப்பு செயலாளர் பதவியில ஆர்.எஸ்.எஸ். ஒருவரை நியமிச்சிருக்கும்.. கேசவ விநாயகம் பதவியை இப்ப பறிச்சுட்டாங்க இல்லையா.. இப்போதைக்கு இந்தியா முழுவதும் பாஜகவுல அவரு இல்லாம 26 அமைப்பு செயலாளர்கள் இருக்காங்க..

இந்த அமைப்பு செயலாளர்கள்தான் ஒவ்வொரு ஸ்டேட் பாஜகவிலும் அதிகாரம் படைச்சவங்க.. மாநில தலைவர் பதவிங்கிறது சும்மாதான்.. நிதி முதல் நிர்வாகிகள் நியமனம் வரை.. டெல்லி தலைவர்கள் மீட்டிங் முதல் உள்ளூர் பிரசாரம் வரை எல்லாமே அமைப்பு செயலாளர் கண்ட்ரோல்தான்..

ADVERTISEMENT

அப்படிப்பட்ட பவர் புல் பதவி.. தமிழக பாஜக அமைப்பு செயலாளரா 11 வருஷமா இருந்தாரு கேசவ விநாயகம்.. போன லோக்சபா எலக்‌ஷனில கூட நயினார் நாகேந்திரனோட ரூ4 கோடி பணம் சிக்கிச்சுன்னு சொன்னாங்களே.. அதுல கூட கேசவ விநாயகம் பேரு அடிபட்டுச்சு.. இப்ப திடுதிப்புன்னு அவரை நீக்கிட்டாங்க..

சென்னை சேத்துப்பட்டுல இருக்கிற ஆர்.எஸ்.எஸ். ஆபீஸ்லதான் நேத்து முக்கியமான அந்த மீட்டிங் நடந்துச்சு.. தன்னை பதவியில் இருந்து ரிலீவ் செய்ய போறாங்கன்னு மீட்டிங்குக்கு முன்னாடி கேசவ விநாயகத்துக்கு தெரிஞ்சுருக்கு.. இதை மற்ற சகாக்கள்கிட்டேயும் சொல்லிட்டுதான் சேத்துபட்டு மீட்டிங்குக்கு கேசவ விநாயகம் போனாரு..

இதை பத்தி பாஜக சீனியர்ஸ்கிட்ட நாம பேசுனப்ப, “எலக்‌ஷனுக்கு 60 நாட்கள்தான் இருக்குங்க சார்… இந்த நேரத்துல முக்கியமான அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து கேசவ் விநாயகம்ஜியை நீக்கினது ஷாக்காதான் இருக்குது..

கேசவ விநாயகத்தை திடீர்னு தூக்கியடிச்சுதுல ரெண்டு பேர் ரோல் ரொம்ப முக்கியம்னு எங்களுக்கு தெரியும்.. ஸ்டேட் பிரசிடெண்ட் நயினார்ஜியை பொறுத்தவரைக்கும் எலக்‌ஷனில்ல சுதந்திரமா செயல்படனும்னு நினைக்கிறாரு.. கேரளா, கர்நாடகா, புதுச்சேரியில அமைப்பு செயலாளர்ன்னு யாரையும் போடலை.. அங்க எல்லாம் ஸ்டேட் பிரசிடெண்ட் தான் முடிவெடுத்து செயல்படுறார்… அதுமாதிரி நம்மையும் ப்ரீயா விடனும்னு நினைக்கிறாரு நயினார்.. அதிகாரம் தன்கிட்டதான் இருக்கனும் நினைக்கிறாரு.. அதுவும் எலக்‌ஷன் டைம் வேற.. சீட் கொடுக்கிறது முதல் எலக்‌ஷன் வேலைகள் எல்லாமே தன்னோட கண்ட்ரோலில் இருக்கனும்னு நயினார் விரும்புறாரு.. அதனால கேசவ விநாயகத்தோட ரோல் பத்தி டெல்லிக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்காருன்னு சொல்றாங்க..

இன்னொருத்தர் கேடிஆர்ஜி.. ஆமா சார் கேடிராகவன்ஜிதான்.. அவரு இப்ப பார்ட்டி இன்ஸைட் விவகாரங்களில்ல ரொம்ப ஆக்டிவ்வா இருக்காரு.. டெய்லியும் ஃபினான்ஸ் மினிஸ்டர் நிர்மலா மேடம்கிட்ட பேசக் கூடியவர்.. இங்க நடக்குற ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் டெல்லிக்கு அவர் மூலமா போய்கிட்டே இருக்கு.. கேசவ விநாயகத்தை பற்றியும் ஏகப்பட்ட கம்ப்ளெயிண்ட் கேடிஆர்ஜி மூலமா டெல்லி போயிருக்கு..

ஃபண்ட் விவகாரங்களில்ல கேசவ்ஜி தாராளமாக சிலர்கிட்ட நடந்துகிட்டாருன்னு ஒரு கம்ப்ளெயிண்ட்.

அடுத்ததா, பிஎம், ஹோம் மினிஸ்டர் இப்படி டெல்லி லீடர்ஸ் வரும் போது எல்லாம் சில குறிப்பிட்ட தனக்கு வேண்டிய “பெண்களுக்கு” மட்டும் கேசவ்ஜி முக்கியத்துவம் தர்றாருன்னும் புகார் சொல்லியிருக்காங்க..

இதை எல்லாம் நேஷனல் ஆர்கனைசிங் செக்ரட்டரி பிஎல் சந்தோஷ்கிட்டேயும் சொல்லி இருக்காங்க.. அதனால எலக்‌ஷன் எல்லாம் பார்க்காம கேசவ்ஜி பதவியை பறிச்சுட்டாங்க” என்கின்றனர்.

சரிய்யா.. கேசவ் விநாயகம் சைடுல என்ன சொல்றாங்க?

அங்கேயும் விசாரிச்சோமே.. கேசவ்ஜி தரப்புல என்ன சொல்றாங்கன்னா, “நடந்தது தெரியாம பலரும் பலவிதமா சொல்றதுதான் கஷ்டமா இருக்கு..2 வருஷத்துக்கு முன்னாடியே தன்னை அமைப்பு செயலாளர் போஸ்ட்டிங்கில் இருந்து விடுவிச்சுடுங்கன்னு லெட்டர் கொடுத்தவர்தான் கேசவ்ஜி.. ஒவ்வொரு மார்ச் மாசமும் பாஜக அமைப்பு செயலாளர்கள் கூட்டத்தை நாக்பூரில ’சங்’ – ஆர்.எஸ்.எ.ஸ் நடத்தும்.. அப்ப ஸ்டேட் பாஜக பார்ட்டி பத்தி அனாலிஸ் செய்வாங்க.. போன வருஷம்கூட டெல்லி மீட்டிங்குல கேசவ்ஜி தான் லெட்டர் கொடுத்ததை பத்தி கேட்டப்ப, மோகன் பகவத்ஜிதான்.. ”இல்லை.. இல்லை.. நீங்க அதே பொறுப்புல இருங்க..”ன்னு வலியுறுத்தி சொன்னாரு..

கேசவ்ஜி, கேரளா நாயர் சமூகத்தைச் சேர்ந்தவரு.. நாகர்கோவில்ல இருந்து நீண்டகாலம் ‘சங்’கத்துல ஆக்டிவ்வா இருக்கிறவரு.. சுனாமி அடிச்சப்ப நாகப்பட்டினத்துல அவரு செஞ்ச களப் பணி எல்லாம் யாருமே செய்ய முடியாது.. தன் தோளில்ல 100க்கும் மேற்பட்ட உடல்களை சுமந்து போய் அடக்கம் செஞ்சவரு.. உழைக்கிறதுக்கு சளைக்காதவரு.. நிதி விவகாரங்களில்ல ரொம்ப கரெக்ட்டா இருப்பாரு.. அதே நேரத்துல தனக்கு ‘தானம்’னு வர்றதை (நன்கொடை) யாரு உதவின்னு போய் கேட்டாலும் அப்படியே கொடுத்துடுவாரு சார்..

‘சங்’ பணிகளில் பெண்களும் வரனும்னு ரொம்ப முன்னுரிமை கொடுப்பாருதான்.. அதையே வேற மாதிரி சொல்லிட்டாங்க போல..

சார் அடுத்த மாசம் ஆர்கனைசிங் செக்ரட்டரீஸ் மீட்டிங் நாக்பூரில நடக்கப் போகுது.. கேசவ்ஜிதான் ஏற்கனவே லெட்டர் கொடுத்திருக்காரு.. அதை பேஸ் பண்ணி அவரை அடுத்த மாசம் ரிலீவ் பண்ணியிருக்கலாம்.. இப்ப திடீர்னு அவரு பதவியை பறிச்சதுதான் எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.. கேசவ்ஜியை ஆக்டிவ் ஆர்.எஸ்.எஸ். ஒர்க்கர்னு பெருமையா சொல்லலாம்.. அவரை ஸ்டேட் பாஜக இழந்திருக்கிறது அவங்களுக்குதான் லாஸ்..” என குமுறுகின்றனர்.

சரி… இப்ப கேசவ் விநாயகத்துக்கு என்ன பதவி கொடுத்திருக்காங்க?

ஆர்.எஸ்.எஸ்-க்கே ரிட்டர்ன் ஆகிட்ட கேசவ் விநாயகத்துக்கு, “ சம்பர்க்” என்ற பொறுப்பு கொடுத்திருக்காங்க.. அதாவது தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மடங்கள், ஆன்மீக நிறுவனங்களோட தொடர்பு வெச்சு ‘இந்துத்துவா’ கோட்பாட்டுக்கு ஆதரவை வலுப்படுத்துறது அவரோட ரோல்.. இன்னொன்னு. “வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர்… சேத்துபட்டு ஆர்.எஸ்.எஸ். ஆபீசில அவருக்குன்னு அறை ஒன்னையும் ஒதுக்கியிருக்காங்க..

’சங்’க கூட்டத்துல ரொம்ப அனல் பறக்குற வாதம் எல்லாம் நடந்துச்சாமே?

நீரு கேட்பது புரியுது… அண்ணாமலையை பத்திதானே.. நேற்று பிஎல் சந்தோஷ், கமலாலயத்துல காலையில நடத்துன மீட்டிங்ஸ்ல அண்ணாமலை கலந்துக்கலை.. சாயங்காலம்தான் சென்னைக்குள்ள வந்தாரு.. ஆர்.எஸ்.எஸ். ஆபீசில் நடந்த மீட்டிங்குல அண்ணாமலையும் கலந்துகிட்டாரு..

அந்த கூட்டத்துல நடந்ததை பத்தி அண்ணாமலை ஆதரவாளர்கள் நம்மிடம் சொல்றப்ப, “ அண்ணாமலைஜி, எலக்‌ஷன் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுறதா அறிவிச்சிருந்தாரு இல்லையா.. அதை பத்தி பேசுனாங்க.. அப்ப அண்ணாமலைஜி, “என்னை 6 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிச்சிருக்கீங்க.. வடக்கே விருகம்பாக்கம்.. தெக்கே பத்மநாபபுரம் தொகுதி.. நடுவுல மதுரை தெற்கு, மேற்குல சிங்காநல்லூர்னு திசைக்கு ஒரு தொகுதின்னு 6 தொகுதிகளை கொடுத்திருக்கீங்க… எல்லா தொகுதிக்கும் போய் அலைஞ்சு வேலை பார்க்கனும்..

இன்னொரு பக்கம் என்னை எலக்‌ஷனில்ல நிற்கனும்னு சொல்றீங்க.. ஆனா தொகுதி எதுன்னும் சொல்ல மாட்டீங்கிறீங்க..

தொகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்தா எப்படி நான் எலக்‌ஷன்ல போட்டியிட்டு வேலை செய்ய முடியும்?.. அப்ப உங்களோட பிளான்தான் என்ன? ன்னு ரொம்ப வேதனையோட பேசுனாரு…

ஆனா அவரோட பேச்சை கண்டினியூ பண்ணவிடாம குறுக்கிட்ட தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ்ஜி, “பார்ப்போம்.. பார்ப்போம்.. இதை எல்லாம் அப்புறமா பேசுவோம்”னு சொல்லி தடுத்துட்டாரு”ன்னு சொல்றாங்க என்றபடியே டைப் செய்துவிட்டு செண்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share