வைஃபை ஆன் செய்ததும், ”ரொம்பவே தத்தளிக்க வைக்கிறதுதான் 2026 எலக்ஷன்” என நேரடியாகவே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா.. விஷயத்துக்கு நேரடியாகவே வந்துட்டீரு?
ஆமாய்யா. இந்த வருஷம் தேர்தல் அப்படித்தானே இருக்கு.. அங்கிட்டு திரும்பிட்டு இங்கிட்டு திரும்பறதுக்குள்ள என்னவோ எல்லாம் நடந்துருதே..
சரிய்யா.. எந்த கட்சியோட ‘சங்கதி’யை சொல்லப் போறீரு?
கூட்டணிக்காக ரொம்பவே தத்தளிச்சுகிட்டு திரிசங்கு நிலையில இருக்கிறது தேமுதிகதான்..
ஆனா குடியரசு தினத்துல ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்த தேநீர் விருந்துல எல்.சுதீஷ்கிட்ட பாஜக நயினார் நாகேந்திரன், அதிமுக ஜெயக்குமார் எல்லாம் ரொம்ப ஜகஜமா பேசிகிட்டு இருந்தாங்க..
ஏன்னா, அமித்ஷா, சுதீஷ்கிட்ட 2 முறை பேசியிருக்காரு.. பாஜக கூட்டணிக்கு விஜய் வரலைங்கிறது கன்பார்ம் ஆனதால திமுக பக்கம் தேமுதிக போயிடக் கூடாதுன்னு டெல்லி பதறுது.. அதனால சுதீஷ்கிட்ட அமித்ஷாவே பேசுனாரு..
அப்ப, தேமுதிகவுக்கு 9 சீட்+ 1 ராஜ்யசபா சீட் தருவோம்னு திமுக சொன்னதாக தமக்கு வந்த தகவலை மனசுல வெச்சுகிட்டு, சுதீஷ்கிட்ட “உங்க டிமாண்ட்” என்னனும் அமித்ஷா கேட்டிருக்காரு..
இதை பத்தி விஜயகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, திமுககிட்ட பேசி கிட்டுதான் இருந்தோம்.. திடீரெனு அமித்ஷாவும் சுதீஷ்கிட்ட பேசுனாரு..
உங்க ‘டிமாண்ட்’ என்னன்னு சொல்லுங்கன்னும் பாஜக சைடுல கேட்டாங்க.. நாங்களும் சொன்னோம்..
அப்ப, உங்களுக்கான ராஜ்யசபா சீட்டை வேற மாநிலத்துல இருந்தாவது கொடுக்கவும் ரெடியா இருக்கிறதா பாஜக தரப்புல சொல்லி இருக்காங்க..
இதுக்கு பிறகு ஆளுநர் மாளிகையில தேநீர் விருந்துக்கு போயிருந்தாரு சுதீஷ்.. அங்க எல்லாருகிட்டேயும் இயல்பாதான் பேசுனாரு..
அண்ணியார் (பிரேமலதா) கேரளாவுக்கு ஆயுர்வேத ட்ரீட்மெண்ட்டுக்குப் போயிட்டு பிப்ரவரி 3-ந் தேதி ரிட்டர்ன் ஆவாங்க..
அண்ணியார் வந்ததுக்கு பிறகு எல்லாரும் பேசி எந்த கூட்டணின்னு அப்பதான் பைனலா சொல்லுவோம்” என பொடிவைத்தபடியே பேசுவதாக டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்கு போனது வாட்ஸ் ஆப்.
