டிஜிட்டல் திண்ணை: அமித்ஷாவின் கைது மிரட்டல் …அடிபணியாத விஜய் …அடுத்த கட்ட பரபரப்பு !

Published On:

| By Mathi

DT Amit Shah Vijay

வைஃபை ஆன் செய்ததும், ‘நான் ராவணன் மவன்டா”ன்னு பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. விஜய்யை பத்தி சொல்ல போறீரா? பாட்டே சொல்லுதே..

ADVERTISEMENT

டெல்லியில சிபிஐ ஆபீஸ் முன்னாடி விஜய் நடத்துன திடீர் ‘ரோடு ஷோ’ பார்த்தீரா?

சிபிஐ விசாரணையை முடிச்சுட்டு ஆபீஸை விட்டு வெளியே வரும் போதே காரில் ஏறி நின்னுட்டு அங்கிருந்த தவெகவினரை பார்த்து ‘உற்சாகமா’ கையை காட்டிட்டு ’சேலஞ்ச் தம்ப்’ சிக்னல் எல்லாம் காண்பிச்சுட்டு போனாரு விஜய்… வழக்கம் போல அங்கேயும் விஜய் கார் பின்னாடியே தவெகவினர் ஓடுனாங்க..

ADVERTISEMENT

கரூர்ல 41 பேர் இறந்தாங்க.. அது சம்பந்தமான விசாரணைக்கு வந்த விஜய் ஏன் திடீர்னு இப்படி ரோடு ஷோ நடத்தி, சேலஞ்ச் தம்ப் சிக்னல் எல்லாம் காண்பிச்சுட்டு போறாருன்னு நமக்கு மட்டுமல்ல.. லைவ் செஞ்ச மீடியாக்காரங்க கூட கேள்வி கேட்டிருந்தாங்க…

நாம விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட இதை பத்தி பேசுனப்ப, “அதுக்கு காரணமே நிம்மதி பெருமூச்சுதான் சார்.. ஏன்னா டெல்லிக்கு விஜய் போறதுக்கு முன்னாடி சென்னையில அமித்ஷா தரப்புல இருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்காக விஜய்யை சந்திச்சாங்க..

ADVERTISEMENT

இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போது ஸ்மூத்தா இருந்துச்சு.. விஜய்யும் கேசுவலா 90 சீட், ரெண்டரை வருஷத்துக்கு சிஎம் பதவி அப்படிங்கிற டிமாண்டை ஸ்டிராங்கா வைச்சிருந்தாரு..

இந்த பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கும் போதே அமித்ஷா தரப்பு ஆட்களோட டோன் ‘வேற மாதிரி’ மாற ஆரம்பிச்சது..

ஒரு கட்டத்துல பேசிகிட்டு இருக்கும் போதே, “ரொம்ப டிமாண்ட் பண்ணாதீங்க… இப்ப நீங்க டெல்லி போறீங்க.. அங்கேயே உங்களை சிபிஐ ஆபீசர்ஸ் அரெஸ்ட் செஞ்சா உங்களால என்ன செஞ்சுட முடியும்? இங்கேயும் உங்க கட்சி ஆட்கள் வீடுகளில்ல ரெய்டு அது இதுன்னு நடக்கும்.. கட்சி அப்படிங்கிறதே இல்லாம போயிடுமே.. இதெல்லாத்தையும் மனசுல வெச்சுக்குங்க” ன்னு ’வேற’ ஒரு டோனில் பேசுனாங்க..

அமித்ஷா தரப்பு ஆட்கள் பேசுன அந்த ‘டோன்’தான் விஜய்யை ரொம்பவே கோபப்பட வைச்சிருச்சு..

அந்த கோபத்தோடதான் டெல்லிக்கு போனாரு.. இப்படி எல்லாம் பேசுறதை பார்த்துட்டுதான் டெல்லியில எதுவும் நடக்கலாம்..விசாரணைன்னு சொல்லி ரெண்டு மூணு நாள் அங்கேயே இருக்க வைச்சுடுவாங்கன்னு கூடுதலா டிரெஸ்ஸையும் கூட சேர்த்தே எடுத்துட்டு போயிருந்தாரு விஜய்..

அமித்ஷா வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற தாஜ் மான்சிங் ஹோட்டல்லதான் விஜய் தங்கி இருந்தாரு.. அங்க சீனியர் வக்கீல்கள், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார்னு எல்லாருமே மிட் நைட் வரைக்கும் டிஸ்கஷன் செஞ்சாங்க..

அப்ப, “விசாரணைக்கு போனா அரெஸ்ட் செய்ய வாய்ப்பிருக்கா?”ன்னு வக்கீல்கள்கிட்ட விஜய் கேட்டாரு..

அதுக்கு வக்கீல்களோ, “அப்படியெல்லாம் செய்ய முடியாது.. இது கூட்ட நெரிசல் கேஸ்.. எத்தனையோ நெரிசல் சம்பவங்கள்ல நிறைய பேர் இறந்திருக்காங்க.. கும்பமேளாவில் கூட இறந்திருக்காங்க.. அதுல எல்லாம் யாரையும் அரெஸ்ட் செய்யலையே.. இந்த கேஸ்ல அரெஸ்ட் செய்ய மாட்டாங்க.. அப்படி நடந்தா நாம கோர்ட்ல பார்த்துக்குலாம்..

இருந்தாலும் சிபிஐ ஆபீசர்ஸ் உங்ககிட்ட ஹார்ஸா கொஸ்டின்ஸ் கேட்டாலும், நிதானமாகவே பதில் சொல்லுங்க..”ன்னு சொல்லி இருந்தாங்க..

இந்த டிஸ்கஷன் முடிஞ்ச பிறகு மறுநாள் காலையில கரெக்ட் டைமுக்கு சிபிஐ ஆபீசுக்கு விஜய் போயிட்டாரு..

விஜய் இந்த விசாரணைக்கு போறதுக்கு முன்னாடியே ஒரு சம்பவம் செஞ்சிருந்தாரு.. அதாவது
சிபிஐக்கு ஒரு லெட்டர் அனுப்பி இருந்தாரு.. அதுல, “சிபிஐ விசாரணையில கரூர் சம்பவத்தை பத்தி மட்டும் கேள்வி கேட்கனும்.. பொலிட்டிக்கலா பிரசர் தர்ற மாதிரியான கேள்விகளை கேட்கக் கூடாது”ன்னு சொல்லப்படிருந்தது..

இந்த லெட்டரோட காபி, சிபிஐ விசாரணையை கண்காணிக்கிற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவுக்கும் அனுப்பி வெச்சிருந்தாங்க..

நேத்து காலையில சிபிஐ ஆபீஸுக்கு விஜய் போனது முதலே, ‘என்ன நடக்குமோ’ங்கிற பதற்றம் எல்லாருக்குமே இருந்துச்சு..

ஆனா ஞாயிற்றுக்கிழமைங்கிறதால சிபிஐ ஆபீசர்ஸ் லேட்டாதான் வந்திருந்தாங்க.. விஜய்கிட்ட பகல் 12 மணிக்கு மேலதான் விசாரணையையே தொடங்கினாங்க..

இந்த டைமும், “நீங்க லேட்டா போனதாலதான் 41 பேர் உயிரிழந்தாங்க”ன்னுதான் சொல்றாங்க என திரும்பவும் விஜய்தான் எல்லாத்துக்குமே காரணம்னு சொல்ற மாதிரியே சிபிஐ ஆபீசர்ஸ் கேள்வி கேட்டாங்க..

அதுக்கு விஜய் பதட்டப்படாம, “நாமக்கல்ல இருந்து போறதுக்கு லேட்டாகிடுச்சு..கூட்டம் அதிகமா வந்ததால நேரத்துக்கு போக முடியலை”ன்னு போன டைம் ரிட்டர்ன் ஸ்டேட்மென்ட்டா என்ன எழுதிக் கொடுத்திருந்தாரோ அதையே நிதானமா சொன்னாரு..

அதுக்கு அப்புறமா, “41 பேர் இறந்ததுக்கு செந்தில் பாலாஜிதான் காரணம்னு எப்படி சொல்றீங்க? அதுக்கு ஆதாரம் இருக்குதா?”ன்னு சிபிஐ ஆபீசர்ஸ் கேட்டாங்க..

இதுக்கு, “செந்தில் பாலாஜி ஆட்கள்தான் கரூர் கூட்டத்துல மயக்க மருந்து ஸ்பிரே பண்ணினாங்க.. அதனால மயங்கி விழுந்தாங்கன்னு எங்க கட்சிக்காரங்க எனக்கு கடிதம் அனுப்பி இருக்காங்க.. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவங்க என்கிட்ட பேசுறப்பவும் இதையேதான் சொன்னாங்க”ன்னு சொல்லிட்டு சில கடிதங்களையும் சிபிஐ ஆபீசர்ஸ்கிட்ட விஜய் கொடுத்தாரு..

மதியம் வழக்கம் போல வெளியில இருந்து விஜய்க்கு சாப்பாடு கொண்டு வந்தாங்க..

இன்னொரு பக்கம், கரூருக்கு விஜய் கூட போன பவுன்சர்ஸையும் கூப்பிட்டு சிபிஐ ஆபீசர்ஸ் தனியா விசாரிச்சாங்க..

சாயங்காலம் நெருங்க நெருங்க சிபிஐ ஆபீசர்ஸ் என்ன சொல்வாங்கன்னு ஒரு பதற்றம் இருக்கத்தான் செஞ்சது.. ஆனா சிபிஐ ஆபீசர்ஸ், “நாளைக்கு நீங்க வரவேண்டியது இல்லை.. தேவைப்பட்டா நாங்க கான்டாக்ட் பண்றோம்”னு சொல்லிட்டு, ”உங்க கட்சிகாரங்க காலையில் இருந்தே வெளியே நிக்கிறாங்க.. எங்கேயும் நகராம நின்னுகிட்டு இருக்காங்க”ன்னு விஜய்கிட்ட சொல்லி அனுப்பி வெச்சாங்க..

அப்பதான் விஜய்யும் கூட இருந்தவங்களும் பெருமூச்சுவிட்டாங்க.. அந்த ஜோரிலேயே வெளியே வந்தப்பதான் காரில ஏறி நின்னுகிட்டு சேலஞ்ச் தம்ப் காண்பிச்சுட்டு போனாரு விஜய்.. நேத்து மிட் நைட்டுலயே சென்னைக்கு ரிட்டர்னும் ஆகிட்டாரு விஜய்” என்கின்றனர்.

டெல்லிக்கு போயிட்டு வந்த விஜய், பாஜகவின் ‘மிரட்டல்’ டோனால் ரொம்பவே டென்ஷனா இருக்குறாராம்..

அதனால வெளிப்படையாகவே சில விஷயங்களை சொல்றதை பத்தி பனையூரில் சீரியசா ஆலோசனை நடத்திகிட்டு இருக்கிறாராம்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share