டிஜிட்டல் திண்ணை : அதிமுக கூட்டணி… அமித் ஷா டோஸ்…அண்ணாமலை சரண்டர்… டெல்லி டே பை டே ரிப்போர்ட்!

Published On:

| By Aara

digital thinnai : amit shah hits annamalai at at delhi

வைபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“கடந்த மார்ச் 25ஆம் தேதி இரவு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

2023ஆம் ஆண்டே பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகிய நிலையில் அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. மீண்டும் தமிழ்நாட்டில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக பாஜக கூட்டணி உருவாகும் என்பதற்கான அச்சாரமாக இந்த சந்திப்பு கருதப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் அமித்ஷாவின் சமூகவலைத்தளத்தில் 2026 இல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். digital thinnai : amit shah hits annamalai at at delhi

அதிமுக பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 2023 பிளவுப்பட்டதற்கு காரணமே மாநில தலைவர் அண்ணாமலையின் அணுகுமுறையும் அதிமுக மீது அவர் வைத்த கடுமையான விமர்சனங்களும் தான்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு அடுத்து மார்ச் 27 ஆம் தேதி காலை அண்ணாமலை அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டார்.

அவர் அமித்ஷாவால் சம்மன் செய்யப்பட்டிருக்கிறார் என்று பிஜேபி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் நேற்று முழுதும் டெல்லியில் அமித்ஷாவுக்காக காத்திருந்த அண்ணாமலை, தன்னுடைய அரசியல் வழிகாட்டியான பி எல் சந்தோஷ் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.

’தமிழ்நாட்டில் கூட்டணியில் இல்லாத அதிமுகவின் பொதுச்செயலாளரை டெல்லிக்கு அழைத்து பேசுகிறீர்கள். இது பற்றி மாநில தலைவர் என்ற முறையில் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன?’ என்று சந்தோஷிடம் அண்ணாமலை நேரிலும் உரிமையாக கேட்டிருக்கிறார். ‘உங்களுக்கு சொல்லவில்லை என்றால் அதன் காரணம் என்ன என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்’ என்று அண்ணாமலைக்கு சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்தார்.

இரு தினங்களுக்கு முன்பு எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தபோது… அதிமுகவின் மறைந்த தலைவர்கள் முதல் இப்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி வரை அண்ணாமலை எப்படியெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்ற வீடியோ காட்சிகளையும் இந்தி சப்டைட்டில்களோடு அமித்ஷாவிடம் அளித்திருந்தனர்.

இது பற்றி எல்லாம் அண்ணாமலையிடம் விசாரித்த அமித்ஷா, ‘உங்கள் வியூகத்தை நம்பி 2024 நாடாளுமன்றத் தேர்தலை தமிழ்நாட்டில் சந்தித்தோம். ஆனால் அதில் நமக்கு பலன் கிடைக்கவில்லை. 2026 இல் திமுகவை ஆட்சியில் இருந்த அகற்றுவதுதான் நமக்கு முக்கியம். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு நாம் கூட்டணி அமைத்தாலும் நீங்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறார் அமித்ஷா.

அண்ணாமலை தன்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லி இருக்கிறார். மேலும், ‘எனக்கு மாநில அரசியலில் தான் அதிக ஆசை. எனவே என்னை டெல்லி பக்கம் அழைத்துக் கொள்ளாதீர்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார். digital thinnai : amit shah hits annamalai at at delhi

annamalai ready to work as party cadre

இந்த சந்திப்புக்கு பிறகு தான் மிகவும் சோர்வான நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கட்சி நலனை விட மக்கள் நலனே முக்கியம். அதனால் எனக்கு யாரோடும் எந்த பிரச்சினையும் இல்லை. திமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவது தான் ஒரே குறிக்கோள். அதற்காக நான் பாடுபடுவேன். மாநிலத் தலைவராக இருந்தாலும் சரி ஒரு தொண்டராக இருந்தாலும் சரி நான் தொடர்ந்து பாடுபடுவேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது’ என்று தனது சுபாவத்தை ஒத்தி வைத்துவிட்டு அமைதியாக பேசியிருக்கிறார் அண்ணாமலை.

டெல்லியில் அமித் ஷாவின் காரசாரமான கட்டளைகளை அடுத்து தான் அண்ணாமலை இப்படி மாறிவிட்டார் என்கிறார்கள்” என்ற மெசெஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share