வைஃபை ஆன் செய்ததும், காலச்சக்கரம் எப்படி எல்லாம் சுழலுதய்யா என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. யாரோட நிலைமையை சொல்றீரு?
டாக்டர் ராமதாஸை பத்திதான்.. அதிமுக- பாஜக கூட்டணியில முதலிலேயே போய் சேர்ந்துட்டாரு அன்புமணி.. அவருக்கு 16+1-ன்னு சொல்லியிருக்காராம் எடப்பாடி..ஆனால் அன்புமணியோ 18+1-ன்னு கேட்டுகிட்டு இருக்கிறாராம்..
அன்புமணி இருக்கிறதால அதிமுக- பாஜக கூட்டணியே வேண்டாம்னுதான் ராமதாஸ் முதல்ல முடிவு எடுத்தாரு..
அதனால ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி, விஜய்கிட்ட பேசுனாரு.. ஆனா விஜய் சிக்னல் கொடுக்கலை..
விஜய் தரப்புல,”தலித் வோட்டர்ஸ் எங்ககிட்ட அதிகமா வந்து இருக்காங்க.. ராமதாஸ் வந்தா அவங்க எப்படி ஒர்க் பண்ணுவாங்க?”ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க..
திமுக பக்கம் போகலாம்னு ராமதாஸ் நினைச்சாலும், “பாமக உள்ளே வந்தா நாங்க வெளியேறுவோம்”னு விசிக திருமாவளவன் திட்டவட்டமாக சொல்லிட்டாரு.. விசிகவை விடுறது இல்லைன்னு ஸ்டாலினும் முடிவா இருக்காரு.. அதனால ராமதாஸை தனிச்சு போட்டியிட சொல்லிப் பார்த்தாரு ஸ்டாலின்.. ஆனா அது நடக்கலை..

இதுக்கு இடையில ராமதாஸ் மறுபடியும் எடப்பாடிகிட்ட பேசிப் பார்த்தாரு.. அதிமுக- பாஜக கூட்டணிக்கே வரலாம்னு நினைக்கிறதை ராமதாஸ் சொல்லி இருக்கிறாரு..
ஏற்கனவே அப்பா ராமதாஸும் மகன் அன்புமணியும் ஒன்னா ஒரே கூட்டணியில இருக்கிறதுலதான் ஆதாயம்னு டெல்லி பாஜக திரும்ப திரும்ப அழுத்தம் கொடுத்துகிட்டே இருக்குது.. இதனால எடப்பாடியும் ரெண்டு பக்கமும் பேசிப் பார்த்தாரு..
ராமதாஸ் சொன்னதை வைச்சு அன்புமணிகிட்ட எடப்பாடி பேசுனதுல கிட்டதட்ட ஓகே ஆகியிருச்சாம்.. அதுக்கு 3 கண்டிஷன் போட்டிருக்கிறாராம் அன்புமணி.
அதென்னய்யா 3 கண்டிஷன்?
இதை பத்தி எடப்பாடிக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப,
அன்புமணிகிட்ட இதை எடப்பாடி சொன்னப்ப.. ‘ராமதாஸ் கூட்டணிக்கு வரட்டும்.. ஆனால் சில கண்டிஷன் இருக்கு”ன்னு சொல்லி இருக்காரு..
அதாவது, “ராமதாஸை நீங்க கூட்டணியில சேர்த்துக்குங்க.. ஆனா எந்த சூழ்நிலையிலும் மாம்பழம் சின்னத்தை ராமதாஸுக்கு கொடுக்க மாட்டோம்.. அவரு எந்த சின்னத்திலும் நிக்கட்டும்.. இரட்டை இலையில கூட நிக்க வையுங்க.. மாம்பழத்தை மட்டும் தரமாட்டோம்னு சொன்னாராம்..
அதே மாதிரி, எங்களுக்கான தொகுதிகள் எதுன்னு முதல்ல முடிவு செஞ்சு சொல்லிடுங்க.. நம்ம டீல் முடிஞ்ச பிறகு அவருக்கான தொகுதிகளை கொடுங்கன்னு கண்டிஷனை சொல்லி இருக்கிறார்.
மூணாவதா,”எப்பவுமே ராமதாஸ் இருக்கிற மேடையில நான் ஏறமாட்டேன்.. கூட்டணி பிரசாரம்னு சொல்லி என்னை அப்படி கூப்பிட்டுவிடாதீங்க”ன்னு சொன்னாராம் அன்புமணி.. இதை அப்படியே ராமதாஸுக்கு பாஸ் செஞ்சிருக்காராம் எடப்பாடி என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.
