வைஃபை ஆன் செய்ததும், ‘என்னய்யா பயங்கர வேட்டையாக’ இருக்கிறதே என அதிர்ச்சியுடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
எங்கப்பா அந்த ‘பயங்கர வேட்டை’?
அதிமுகவில்தான்.. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் ‘மக்களைக் காப்போம்’ டூர் போகிறாரே.. இந்த டூரில்தான் அப்படி ஒரு ‘ரணகளமான வசூல்’ வேட்டையாம்..
இப்பவே லோக்கல் அதிமுக நிர்வாகிகள் ஆரம்பிச்சுட்டாங்களா?
இல்லைய்யா.. அவங்க ‘சிவனே’ன்னுதான் இருக்காங்க.. எடப்பாடி டீம்தான் இந்த வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறது..
ஓஹோ.. விளக்கமாக சொல்லுமய்யா
தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த பயணத்துக்கு ஒரு தொகுதிக்கு ரூ.75 லட்சம் செலவாம்.. இதில் ஒரு தொகுதிக்கு ரூ.25 லட்சத்தை கொங்கு மாஜியும் ரூ.50 லட்சத்தை எடப்பாடியும் கொடுக்கிறாங்க…
அவங்க கட்சிக்கு அவங்க செலவுதான செய்யுறாங்கா.. வசூல் மேட்டர் எங்க?
இப்படி எடப்பாடி பழனிசாமி டூர் போகிற இடத்தில் எல்லாம் அவரது மகன் டீம் தவறாமல் ஆஜராகிவிடுகிறதாம்.. ஒவ்வொரு தொகுதிக்கும் போய் லோக்கல் பிரமுகர்களிடம் களநிலவரத்தை, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பற்றி விலாவாரியாக கேட்கின்றது இந்த டீம்..
அப்படியே சிலரை சந்திக்கும் போது, “நீங்கதான் இந்த தொகுதியின் அடுத்த MLA..செலவு ஏற்பாடுகளை பார்த்துக்குங்க” என நம்பிக்கை கொடுக்கிறதாம்..
அதேபோல அந்த தொகுதிகளின் முன்னாள் அமைச்சர்களையும் தனியே சந்திக்கிறது இந்த டீம். அப்போது, “நிச்சயம் உங்களுக்கு கேபினட்டில் இடம் இருக்கு.. உங்களுக்கு கொடுக்கமலா போவோம்.. ரூ.200 கோடி மட்டும் ‘ரெடி’ செஞ்சுடுங்க அண்ணா” என வெளிப்படையாக சொல்லிவிடுகிறதாம் எடப்பாடி மகன் டீம்.
இப்படி வெளிப்படையாக ‘அமைச்சர் பதவிகளை’ விலை பேசும் எடப்பாடி டீமிடம் பவ்யமாக, “அவ்வளவு தர முடியாதுங்க.. என்கிட்ட ரூ.100 கோடி இருக்கு.. அதை கொடுக்கிறேன்” என சொல்லி வைத்தது போல சிலர் வாக்குறுதி தந்துள்ளனராம்..
வடமாவட்ட முக்கிய மாஜி அமைச்சர், காவிரி டெல்டாவில் தனி ராஜாங்கம் நடத்தும் மாஜி அமைச்சர், மத்திய தமிழக எல்லையில் இருக்கும் மாஜி அமைச்சர் என பலரும் இப்படி ரூ.100 கோடி வாக்குறுதி கொடுத்துவிட்டு ‘மந்திரி’ பதவி கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனராம் என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.