உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தாரா விஜய்? உண்மை என்ன?

Published On:

| By Kavi

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் பிரச்சாரத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தவெக தலைவர் விஜய் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

ADVERTISEMENT

அப்போது,  மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? மக்களை விரும்பும் விஜய் வேணுமா?  என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். 

தனது பேச்சின் நிறைவாக,  நான் உங்ககிட்ட கேட்பது ஒன்னே ஒன்னுதான் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி காலைல பக்காவ ரெடி ஆகிட்டு, பூத்துக்கு போய் விசில் சின்னத்தை அழுத்துங்க என்று வாக்கு சேகரித்தார். 

ADVERTISEMENT

ஆனால் இணையதளங்களில் விஜய்யின் பேச்சு எடிட் செய்யப்பட்டு விஜய் உதயசூரியனுக்கு வாக்களிக்க சொன்னது போல வீடியோ வெளியானது. 

அந்த வீடியோவை இணையத்தில் பலரும் பரப்பி வருகின்றனர். 

ADVERTISEMENT

இதனால் தற்போது தவெகவினர் முதல்வர் ஸ்டாலின், விசில் சின்னத்தை கையில் வைத்துக்கொண்டு வாக்கு சேகரிப்பது போல புகைப்படத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share