கரூர் விஜய் பிரசரா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை தமது எக்ஸ் பக்கத்தில், “விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ்,நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும்,விஜய்க்கும் ஒதுக்கியது!ஆனால்,அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும்,உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?” என கேள்வி எழுப்பி இருந்தார்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அளித்த விளக்கம்:
‘கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது. ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?’ என்று அதிமுக எம்.பி இன்பதுரை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டதாக காண்பிக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் இடம் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா. தவெக தரப்பில் அனுமதி கேட்டது லைட் ஹவுஸ் ரவுண்டானா, பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இரண்டும் வெவ்வேறு பகுதி.
பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் !
படம் 1 : தவெக அனுமதி வேண்டிய கடிதத்தில் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படம் 2 : பேருந்து நிலைய ரவுண்டானா மற்றும் லைட் ஹவுஸ் ரவுண்டானா வேறு வேறு என்பதை வரைபடம் மூலம் காணலாம்.
படம் 3 : முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டது கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா. இவ்வாறு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.