மோடியை தாக்க ஜோதிமணி, சுதா உள்ளிட்ட எம்.பிக்கள் திட்டமா? ஓம்பிர்லாவுக்கு காங். கண்டனம்

Published On:

| By Mathi

Congress Modi

மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க ஜோதிமணி, சுதா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடி தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன். அவருக்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

பிரதமர் அவைக்கு வந்து சீனா ஊடுருவல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணிந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில், இன்று அவர் அவைக்கு வரவில்லை. அதற்கு சபாநாயகர் மேற்கண்டவாறு விளக்கமளித்திருக்கார். நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை. எனவே, அவர் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share