நடிகர் ரவி மோகன் புதிதாகத் தொடங்கிய ஆர்.எம். ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவன தொடக்க விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை பாவனா தொகுத்து வழங்கினார்.
அந்த விழாவில் சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெனிலியா உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது, யோகி பாபு இருந்த இடத்திற்கு சென்ற பாவனா, “எங்க இருந்தீங்க நீங்க? நான் உங்கள பார்க்கவே இல்லையே? முன்னாடி வாங்க மைக்க பிடிங்க.. முதலில் எங்களுக்காக எழுந்து நில்லுங்கள்” என்றார் அதட்டலாக.
அதற்கு, “உன் பின்னாடி தான் நின்றேன்” என்றார் யோகிபாபு.
இப்போது “நீங்கள் முன்னாடி வந்து விட்டீர்கள் அதான் பார்த்தேன். இப்போது ஒரு மைன்டு வாய்ஸ் கேம் விளையாடலாமா? முதலில் உங்களது மைண்ட் வாய்ஸில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது” என்று சொல்லுங்கள் என பாவனா கேட்டார்.
அதற்கு, “யோகி பாபுவோ, என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு. அந்த படம் நல்லா வரணும்.அவரது தயாரிப்பு நிறுவனம் நல்ல படியா வளரணும்” என யோகி பாபு தெரிவித்தார். உடனே பாவனா, “நல்லவரு மாதிரியே பேசுறீங்க. அதை தாண்டி என்ன நினைக்குறீங்க” என நக்கலாக கேட்டார்.
அதற்கு யோகி பாபு , “பின்ன நான் பின்னாடி நிற்கும் போது அந்த மனுஷனுக்கு வழி விடாதீங்க, சேர் போடாதீங்கன்னு உன்னை மாதிரி நான் நினைக்கலயேம்மா, நான் நல்லது தானே நினைத்தேன்” என்றார்.
இதையடுத்து பாவனா, “நீங்கள் ரொம்ப நல்லவர் தான். நல்ல மனிதர்” என்று கூற.. அதை “கொஞ்சம் சிரித்த மாதிரியே சொல்.. குழாயடி சண்டை போடுற மாதிரியே பேசுற”.. என்றார் யோகி பாபு.
இதையடுத்து பாவனா யோகி பாபுவிற்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் யோகி பாபு என்றால் கேவலமா என பாவனாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரித்து இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் worst behaviour Bhavana என்றும் டேக் செய்து வருவது பேசுபொருளாகி உள்ளது.