ஜனநாயகன் ஓடிடி உரிமத்தை ரத்து செய்த அமேசான்?

Published On:

| By Kavi

ஜனநாயகன் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரத்து செய்திருக்கிறது.

விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. 

ADVERTISEMENT

தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே பெரும் சர்ச்சைகளையும், தாமதங்களையும் சந்தித்து வருகிறது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால்  படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன் நீதிமன்றங்களை நாடியும் சாதகமான உத்தரவு வராததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 

இதற்கிடையே  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் சுமார் 120 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் தற்போது வரை வெளியீட்டுத் தேதி குறித்து தெளிவான தகவல் இல்லாததால், அமேசான் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகவும் தகவல்கள் வந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் ரத்து செய்துள்ளதாக  சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share