’ரத்தமும் சதையுமாகப் படம் எடுக்கிறோம்’ என்ற பெயரில் திரையில் வன்முறைக் காட்சிகளைப் புகுத்துவது சமீப ஆண்டுகளாக அதிகமாகி வருகிறது. அதிலிருந்து விலகி நிற்கிற படங்களே அரிது என்றாகிவிட்டது.
ரொமான்ஸ், கிளாமர் மற்றும் அந்தரங்க காட்சிகள் சார்ந்தும் சில படங்கள் ‘யு/ஏ’ சான்றிதழ் அல்லது ‘ஏ’ சான்றிதழ் பெற்று வருகின்றன. பெரும்பாலான படங்கள் ‘யு/ஏ’ சான்றிதழைக் குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன. அதனால், ஓராண்டில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் தணிக்கை வாரியத்திடம் இருந்து ‘யு’ சான்றிதழ் பெறுவது குறைந்து வருகிறது.
இந்த நிலையில், ‘பேமிலி ஆடியன்ஸ்’ஸை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிற விதத்தில் ‘இட்லி கடை’ படக்குழு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 24ஆம் தேதியன்று தணிக்கை செய்யப்பட்ட இப்படம் ‘யு’ சான்றிதழைப் பெற்றுள்ளது. இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்கி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், கீதா கைலாசம், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.