ஆகம விதிப்படி திருக்கார்த்திகை நாளில் மட்டுமே கோயில்களில் தீபம் ஏற்ற வேண்டும் என பிள்ளையார் பட்டி தலைமை குருக்கள் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடரந்து கடந்த இரண்டு நாட்களாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடந்த இரண்டு நாட்களாக முயற்சித்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலின் தலைமை குருக்களும், உலக இந்து ஆன்மிக , பண்பாட்டு மையம் – நிறுவனருமான சிவஸ்ரீ கே. பிச்சை குருக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சிவாகமங்களில் கூறியபடி திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கோவில்களில் தீபமேற்றி வழிபடுவதுதான் வழக்கம் என்பதையும் இதர நாட்களில் இவ்வழிபாடு செய்வது வழக்கத்திற்கு மாறானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
