டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலைய நுழைவு பகுதியில் நவம்பர் 10 ம் தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 73 பேரின் சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணையில் உமர் உல் நபி என்பவர் தற்கொலை படையாக செயல்பட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் உமர் நபியின் கூட்டாளி ஒருவரை ஜம்மு காஷ்மீரில் NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்களின் உள்ளிட்ட 4 பேரை 3 நாட்கள் தொடர் விசாரணைக்கு பின் NIA அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி குண்டு வெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
