டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பிரதமர் மோடி மற்றும் மாநிலங்களின் முதல்வர்கள் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். 24 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைவர்களின் கருத்துகள்:
பிரதமர் மோடி: டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியானது கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்தின் காட்சிகள் இதயத்தை நொறுக்குவதாக உள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு: மோடி, ஸ்டாலின், மமதா, பினராயி விஜயன் அதிர்ச்சி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: டெல்லி செங்கோட்டை இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது; கவலையளிக்கிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன்: கோழைத்தனமான தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். டெல்லி செங்கோட்டை இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது; கவலையளிக்கிறது.