டெல்லி குண்டு வெடிப்பு: சிக்கலில் ஹரியானா அல்ஃபலா பல்கலை.- அமலாக்கத்துறை விசாரணை!

Published On:

| By Mathi

Delhi University

ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் அல் ஃபலா பல்கலைக் கழகம், ‘ஒயிட் காலர்’ பயங்கரவாத நெட்வொர்க்கின் மையமாக செயல்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் நவம்பர் 10-ந் தேதி இரவு செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது தற்கொலைப் படை தாக்குதல் என விசாரணை அமைப்புகள் கூறி வருகின்றன.

ADVERTISEMENT

மேலும் டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட 3 டாக்டர்களும் ஹரியானா ஃபரிதாபால் அல்ஃபலா பல்கலைக் கழகத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணை வளையத்துக்குள் ஃபரிதாபாத் அல் ஃபலா பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ துறை பிரிவில்தான் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் திட்டங்களுக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும் விசாரணை அமைப்புகள் சந்தேகிக்கின்றன. இதனையே ஒயிட் காலர் பயங்கரவாதம் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

தற்போது அல் ஃபலா பல்கலைக் கழகத்துக்கான நிதி தொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share