சிலிண்டர்கள் தட்டுப்பாடு : பிஜி-க்களில் சப்பாத்தி, தோசை நிறுத்தம்!

Published On:

| By Kavi

சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக  விடுதிகளிலும் உணவு வகைகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் சிலிண்டர்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.  

ADVERTISEMENT

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பயன்படுத்தும் வணிக ரீதியிலானசிலிண்டர்கள் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பல ஹோட்டல்கள் தற்காலிகமாகச் செயல்படவில்லை. பல ஹோட்டல்கள் உணவு வகைகளை குறைத்துள்ளன. 

அதேபோன்று விடுதிகளிலும் உணவு வகைகளில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தமிழ்நாடு ஐடி விடுதி மற்றும் பிஜி உரிமையாளர்கள் நலச் சங்கம் இன்று (மார்ச் 10) வெளியிட்ட அறிக்கையில், “விடுதிகளில் இனி டீ ம்ற்றும் காபி போடப்படாது.  அதிக எரிவாயு தேவைப்படுவதால், சப்பாத்தி மற்றும் தோசை வகைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. இரவு உணவின் போது சாம்பார் அல்லது குருமா போன்ற கூடுதல் வகைகள் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக சட்னி வழங்கப்படும்.

வாரத்தில் 2 அல்லது 3 முறை முட்டை மற்றும் அப்பளம் மாறி மாறி சைடிஷ் ஆக வழங்கப்படும். உணவில் கலவை சாதம் வழங்கும் முறை அதிகரிக்கப்படும். எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க மாற்று வழிகளைச் சங்கம் ஆராய்ந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share