திருப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் சமையல் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 42 வீடுகள் தரைமட்டமானது. cylinder explosion in neighboring houses
திருப்பூரில் உள்ள எம்ஜிஆர் நகர் புளியந்தோட்டம் பகுதியில் சாயா தேவிக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் தகரத்தை பயன்படுத்தி சிறிய அளவில் 42 கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில் தமிழகத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 8) பிற்பகல் 2.45 மணியளவில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது.
இதைத்தொடர்ந்து அருகருகே இருந்த வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 5க்கும்ம் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்துள்ளன. இதனால் அப்பகுதியில் தீ மளமளவென பரவியது.
இந்த விபத்தில் 42 வீடுகளும், அங்கிருந்த உடைமைகளும் தீயில் கருகி நாசமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு, வடக்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர். இதில் அந்த வீடுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
தீக்கிரையான வீடுகளில் தங்கி இருந்தவர்கள் பகலில் பணிக்கு சென்றதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. பணி முடிந்து வந்தவர்கள் தீயில் எரிந்து கிடந்த உடைமைகளை மீட்டு வருகின்றனர். cylinder explosion in neighboring houses