குவாட்டர், பிரியாணி வேணும்… போலீசிடம் வம்பிழுத்த புள்ளிங்கோ!

Published On:

| By Selvam

கடலூரில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் போலீசிடம், குவாட்டர், பிரியாணி கேட்டு டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Cuddalore drunken man argue

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சு.கீனனூரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் ஐயப்பன். இவர் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி கருவேப்பிலங்குறிச்சி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து ஐயப்பனுக்கு தர்ம அடி கொடுத்த அப்பகுதி மக்கள், அவரை பிடித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் கொடுத்த அடியில் சட்டை கிழிந்து ரணகளமான ஐயப்பன், போலீஸ் ஸ்டேஷன் முன்பாக போலீஸிடம் குவாட்டர், பிரியாணி கேட்டு அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் ஐயப்பன், “என் டிரஸ்ஸ கிழிச்சீட்டிங்க, புது டிரஸ் எப்போ வாங்கி தரப்போறீங்க? எனக்கு உடனே டிரஸ் வாங்கித் தாங்க. எப்படியும் இன்னைக்கு என்னை அடிச்சி கிழிக்கப் போறீங்க.. அதனால பிரியாணியும், குவாட்டரும் வாங்கிட்டு வாங்க. அதுக்கப்புறம் என் மேல கை வைங்க. என் உடம்புல தெம்பு இல்லை. நான் எல்லாத்துக்கும் துணிஞ்சவன் தான்” என்று போலீசிடம் அலப்பறை செய்கிறார்.

ஒருபுறம் இந்த வீடியோவை பகிர்ந்து சிலர் கலாய்த்து வரும் அதேவேளையில், தமிழகத்தில் மது, போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். Cuddalore drunken man argue

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share