விரைவில் CTET 2026 ரிசல்ட் … 25 லட்சம் தேர்வர்கள் காத்திருப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

ctet 2026 result soon qualifying marks details

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் CTET 2026 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் தேர்வர்கள் இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர் என்பதால், ரிசல்ட் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிப்ரவரி 7 மற்றும் 8, 2026 அன்று நடைபெற்ற இந்த தேர்வின் ப்ரொவிஷனல் அன்சர் கீ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி அன்சர் கீக்கு பிறகு ரிசல்ட் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ரிசல்ட் எப்போது வெளியாகும்?

CTET 2026 தேர்வு முடிவுகள்:

  • விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளம் (ctet.nic.in) மூலம் வெளியிடப்படும்
  • இறுதி அன்சர் கீ வெளியானதும் ரிசல்ட் வெளியாகும்

என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

மாணவர்கள்:

  • ரோல் நம்பர்
  • பிறந்த தேதி

பயன்படுத்து ஆன்லைனில் ரிசல்டை பார்க்க முடியும்.

ADVERTISEMENT

தேர்ச்சி மதிப்பெண்கள்

CTET தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் பின்வருமாறு:

  • ஜெனரல் (UR) – 60% (150ல் 90 மார்க்ஸ்)
  • OBC / SC / ST / PwD – 55% (150ல் 82 மார்க்ஸ்)

இந்த குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றால் தான் CTET Qualified என்று அறிவிக்கப்படுவார்கள்.

தேர்வு அமைப்பு – ஒரு பார்வை

CTET தேர்வு:

  • Paper 1 – 1 முதல் 5ஆம் வகுப்பு ஆசிரியர் தகுதி
  • Paper 2 – 6 முதல் 8ஆம் வகுப்பு ஆசிரியர் தகுதி
  • மொத்த மதிப்பெண் – 150
  • நெகட்டிவ் மார்கிங் இல்லை
தேர்ச்சி பெற்ற பிறகு என்ன?

CTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்:

  • மத்திய அரசு மற்றும் CBSE பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
  • CTET சான்றிதழ் தற்போது Lifetime validity உடையது
முக்கிய குறிப்புகள்
  • ரிசல்ட் – விரைவில் வெளியீடு
  • 25 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்
  • 90+ (ஜெனரல்) / 82+ (ரிசர்வ்) – பாஸ்
  • அதிகாரப்பூர்வ சைட் மூலம் மட்டுமே சரிபார்க்க வேண்டும்

மொத்தத்தில், CTET 2026 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில், குறைந்தபட்ச க்வாலிபை மார்க்ஸை அடையுமா என்பது பல லட்சம் தேர்வர்களின் முக்கிய கவலையாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share