“மத்திய அரசுப் பள்ளிகள்ல டீச்சர் வேலை பாக்கணும்… கைநிறையச் சம்பளம் வாங்கணும்…” என்ற கனவோடு படித்துக்கொண்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்களே, உங்களுக்கான முக்கியமான நாள் நெருங்கிவிட்டது! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் சிடிஇடி (CTET – Central Teacher Eligibility Test) தேர்வுக்கான அட்மிட் கார்டு (Admit Card) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், “எப்போ வரும் ஹால் டிக்கெட்?” என்று கணினி முன் காத்துக் கிடந்தவர்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி.
எங்கே டவுன்லோட் செய்வது? தேர்வர்கள் வேறு எந்தப் பக்கத்திற்கும் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in என்ற முகவரிக்குச் சென்றாலே போதும்.
டவுன்லோட் செய்வது எப்படி? (ஸ்டெப்-பை-ஸ்டெப்)
- முதலில் ctet.nic.in இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
- முகப்புப் பக்கத்தில் “Download Admit Card: CTET Jan-2026” (அல்லது தொடர்புடைய மாதம்) என்ற லிங்க் பளிச்சிடும். அதை கிளிக் செய்யவும்.
- உங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிடவும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘செக்யூரிட்டி பின்’ (Security Pin) நம்பரை டைப் செய்து ‘Submit’ கொடுக்கவும்.
- அவ்வளவுதான்! உங்கள் ஹால் டிக்கெட் ஸ்கிரீனில் தெரியும். அதை டவுன்லோட் செய்து, ஒரு பிரிண்ட் அவுட் (Print out) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை: ஹால் டிக்கெட்டை எடுத்ததும், “அப்பாடா!” என்று மூடி வைத்து விடாதீர்கள். அதில் உள்ள உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் கையெழுத்து சரியாக உள்ளதா என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையம் (Exam Center) எங்கே இருக்கிறது என்பதைக் கூகுள் மேப்பில் இப்போதே பார்த்து வைப்பது புத்திசாலித்தனம்.
தேர்வு மையத்திற்குள் என்னென்ன கொண்டு செல்லலாம், எதற்கெல்லாம் தடை (Prohibited Items) என்ற பட்டியலும் அதில் இருக்கும். அதைப் பொறுமையாகப் படித்துப் பாருங்கள்.
கடைசி நேரத்துல சர்வர் பிஸியாகி சுத்துனா டென்ஷன் ஆகிடுவீங்க பாஸ். அதனால, இந்த நியூஸை படிச்ச உடனே ஹால் டிக்கெட்டை டவுன்லோட் பண்ணிடுங்க. கலர் பிரிண்ட் எடுத்தா போட்டோ இன்னும் தெளிவா இருக்கும். எக்ஸாம் அன்னைக்கு ஒரிஜினல் ஐடி ப்ரூப் (Aadhar / PAN) கொண்டு போக மறக்காதீங்க. கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் வேலை வாங்க இதுதான் முதல் படி. ஆல் தி பெஸ்ட்!
