ADVERTISEMENT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்

Published On:

| By Mathi

India Pakistan

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவில் விளையாட மறுத்ததால் வங்கதேசம் நீக்கப்பட்டது. ஆனால் வங்கதேசத்தை ஆதரித்து டி20 உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் அறிவித்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கடும் எச்சரிக்கை மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்குப் பின்னரே பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் பாகிஸ்தானை இன்று இரவு இந்தியா எதிர்கொள்கிறது. இருநாடுகளின் இன்றைய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share