ஓரணியில் தமிழ்நாடு – ஒடிபி பெற தடை : திமுக மனு தாக்கல் செய்ய அனுமதி!

Published On:

| By Kavi

DMK OTP dispute

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ஒடிபி பெற தடை விதிக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக திமுக புகார் தெரிவித்துள்ளது. DMK OTP dispute

தமிழகம் முழுவதும் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தி வருகின்றனர். DMK OTP dispute

ADVERTISEMENT

இதற்காக ஒவ்வொரு வீடாக சென்று ஆதார் எண், மொபைல் எண் என வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. DMK OTP dispute

அதிமுக சார்பில் திருபுவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கு நேற்று (ஜூலை 21) விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில், “திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடத்துகின்றனர். அப்போது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு மிரட்டுகின்றனர். இல்லையென்றால் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு திட்டங்கள் எதுவும் பெற முடியாது என்று கூறுகின்றனர். எனவே மொபைல் எண், ஓடிபி, ஆதார் எண் உள்ளிட்டவை கேட்க தடை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது ஒடிபி பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் தாமாக முன்வந்து சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 2வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிபதிகள் முன்பு இன்று (ஜூலை 22) ஆஜரானார். 

அப்போது அவர், ஓரணியில் தமிழ்நாடு முகாமில் ஆதார் விவரங்கள் எதையும் திமுகவினர் வாங்கவில்லை. ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒடிபி பெறுவதாக அதிமுக தரப்பில் தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து இடைக்கால உத்தரவு பெற்றுள்ளனர். 

தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. உறுப்பினர் சேர்க்கை குறித்து சம்மதம் பெறுவதற்காகவே ஒடிபி பெறப்பட்டது. வேறு எந்த ஆவணத்தையும் நாங்கள் வாங்கவில்லை. 

உயர் நீதிமன்ற தடையால் தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. திமுக கோரிக்கையை அவசர வழக்காக விசாரித்து இடைக்கால தடையை நீக்க வேண்டும்” என்று முறையிட்டார். 

இதற்கு நீதிபதிகள் திமுக கோரிக்கை குறித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கை நாளை விசாரணைக்கு எடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share