கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ’மோனிகா’ யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. coolie second single monica trending no 1
லியோ வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளாக வெளியான சிக்குடு வைப் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் அனிருத் – சாண்டியின் கூட்டணி பெரிய அளவில் பேசப்பட்டது.
அதே கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கிய மோனிகா பாடல் நேற்று வெளியானது. தற்போது 5.5 மில்லியன் பார்வைகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே சிவப்பு நிற உடையில் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் அவரையும் தாண்டி ரசிகர்களின் பார்வை மலையாள நடிகரான செளபின் சாஹிர் மீது திரும்பியுள்ளது.
அவரது நடனத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு ரசிகர், “அந்த கூச்ச சுபாவமுள்ள ஒருவர் கடைசியா டான்ஸ் ஆட முடிவு பண்ணிட்டார்” என்றும், மற்றொரு ரசிகர், “மலையாள இயக்குனர்கள் கூட சௌபினை இந்த அளவு பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் லோகேஷ் அவரது மறுபக்கத்தை காட்டியுள்ளார். சௌபின் கலக்கிவிட்டார்” என பாராட்டியுள்ளார்.
இதே போன்று ரசிகர்கள் பலரும் செளபின் சாஹிர் நடனத்தைக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.