ADVERTISEMENT

நான்கு நாளில் இமாலய வசூல் சாதனை படைத்த கூலி!

Published On:

| By christopher

coolie 4 days box office collection hits peak

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கூலி’.

இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றபோதிலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கூலி முதல் நாளில் ரூ. 151 கோடி வசூல் செய்ததாக படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் முதல்நாளில் அதிகம் வசூல் செய்த லியோ (ரூ. 148 கோடி) வசூலை முறியடித்தது.

இதனையடுத்து கடந்த நான்கு நாட்களில் கூலி ரூ. 404 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. மேலும் உலகளவில் 4 நாட்களில் அதிக வசூலை குவித்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் கூலி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share