காங்கிரஸின் கூட்டணி ஆட்சி கோரிக்கையை நிராகரித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ”அதிகாரத்தில் பங்கு என கேட்பது காங்கிரஸின் உரிமை. ஆனால் கூட்டணி ஆட்சியே இல்லை என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்” என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, “இதற்கு பதிலை நாங்கள் சொல்வோம்” என்று கூறினார்.
