ADVERTISEMENT

திருப்பி அடிப்போம்.. மாணிக்கம் தாகூர் பேச்சுக்கு காங். எம்.பி. சசிகாந்த் செந்தில் ரியாக்‌ஷன்

Published On:

| By Mathi

Congress MPS

திமுக மீதான காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனங்களுக்கு மற்றொரு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் பதில் அளித்துள்ளார்.

பொன்னேரியில் இன்று பிப்ரவரி 15-ந் தேதி செய்தியாளர்களிடம் சசிகாந்த் செந்தில் எம்.பி. கூறியதாவது: இந்தியா முழுவதும் ஒரு பெரிய சித்தாந்த சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டமே மாற்றப்படும் நிலைமையில் இன்று இருக்கிறோம். இந்த நிலைமையில எங்களுடைய சொந்த விஷயங்களை பார்ப்பதை விட, எந்த அரசாங்கம் வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும், இந்த அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்படும் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி பேசுவது எல்லாமே எங்கள் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தான் பேசுவாங்க.. முடிவு செய்வாங்க… அதைப்பற்றி நாங்க பொதுவெளியில பேசுறது சரியில்லை..எங்களை மாதிரி ஆட்களுக்கு அப்படி பேசுறது கரெக்ட் கிடையாது.

திருப்பி அடிக்க காங்கிரஸ் கட்சியில பவர் இருக்கா இல்லையா என்பது மக்களுடைய முடிவுதான். ஒரு அரசியல் கட்சிக்கு எப்பவுமே பவர் சொந்தமா வராது. மக்கள்தான் தர வேண்டும். இவ்வாறு சசிகாந்த் செந்தில் எம்.பி. கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share