2 மாதங்களாக திமுகவுக்காக காங்கிரஸ் காத்திருக்கிறது.. கிரிஷ் சோடங்கர்

Published On:

| By Mathi

Girish Chodankar

கூட்டணி தொடர்பாக திமுகவின் முடிவுக்காக 2 மாதங்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

IANS செய்தி நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் ஸ்டாலினை டிசம்பர் 3-ந் தேதி சந்தித்து பேசினோம். அப்போது டிசம்பர் 15-ந் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என கோரியிருந்தோம். கடந்த 2 மாதங்களாக திமுகவின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

ADVERTISEMENT

எதிர்க்கட்சிகள் மிக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்களும் அதற்கு ஈடு கொடுக்க வேகமாக செயல்பட வேண்டும்.

எங்கள் கூட்டணியில் திமுக முக்கியமான கட்சி. தேர்தலுக்கு சில காலம்தான் இருக்கும் நிலையில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அவசியமாகிறது. இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, அதிகாரத்தில் பங்கு- அதிக தொகுதிகளைக் கேட்கிறது. கூட்டணி ஆட்சி என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது; ஆனால் முதல்வர் ஸ்டாலின், இந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

இன்னொரு பக்கம், விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தியும் வருகின்றனர். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share