கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் தலைமையில் காங்கிரஸ் தேர்தல் குழுக்கள்!

Published On:

| By Mathi

Congress TNCC

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாநில தேர்தல் குழு, தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ராஜேஷ்குமார், கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி உட்பட மொத்தம் 37 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டாக்டர் செல்லக்குமார் தலைமையில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மொத்தம் 51 பேர் உள்ளனர்.

காங்கிரஸின் விளம்பரம், ஊடக மேலாண்மை குழு தலைவராக விஜய் வசந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

தேர்தல் மேலாண்மை- ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share