ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்னணியில் நட்டா… சந்தேகம் எழுப்பும் காங்கிரஸ்!

Published On:

| By christopher

Congress doubts on Jagdeep Dhankhar's resignation

துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினமாக சந்தேகத்தை எழுப்புவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜூலை 22) தெரிவித்துள்ளார். Congress doubts on Jagdeep Dhankhar’s resignation

நாட்டின் துணை குடியரசுத் தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டுஜெகதீப் தன்கர் பதவியேற்றார். வரும் 2027 வரை இவரது பதவிக்காலம் உள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக கடந்த 10ஆம் தேதி நடந்த விழா மேடை ஒன்றில் கூட, “நான் சரியான நேரத்தில் ஓய்வு பெறுவேன். ஆகஸ்ட் 2027 வரை எனக்கு நேரம் உள்ளது. தெய்வீக தலையீட்டால் இது மாறலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அடுத்த 11வது நாளில் நேற்று இரவு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்டார். அதில் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார். இது தேசிய அரசியல் அரங்கில் கவனம் பெற்றது.

ADVERTISEMENT

தொடர்ந்து அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று ஏற்றுக்கொண்டார்.

எனினும் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும்!

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”நேற்று மதியம் 12:30 மணிக்கு, ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழுவிற்கு (BAC) தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், அவைத் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு, குழுவின் அடுத்த கூட்டம் மீண்டும் மாலை 4:30 மணிக்கு நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

மாலை 4:30 மணிக்கு, தன்கர் தலைமையில் குழு உறுப்பினர்கள் மீண்டும் கூட்டத்திற்காக கூடினர். அனைவரும் நட்டா மற்றும் ரிஜிஜுவுக்காகக் காத்திருந்தனர், ஆனால் அவர்கள் வரவில்லை. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இரு அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவர் வருத்தமடைந்தார், அடுத்த BAC கூட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு ஒத்திவைத்தார்.

நேற்று மதியம் 1 மணி முதல் 4:30 மணி வரை ஏதோ தீவிரமான ஒன்று நடந்திருக்க வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. இதன் விளைவாக ஜே.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜிஜு வேண்டுமென்றே மாலை கூட்டத்தைத் தவிர்த்தனர். தற்போது மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு நடவடிக்கையாக, ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமாவிற்கு உடல்நலக் காரணங்களைக் குறிப்பிட்டார். இதை நாம் மதிக்க வேண்டும்.

எனினும் அவரது ராஜினாமா முடிவிற்கு பின்னால் ஆழமான காரணங்கள் உள்ளன.

தன்கருக்கு பாராட்டு!?

தன்கர் எப்போதும் 2014 க்குப் பிறகு இந்தியா குறித்து பாராட்டி பேசி வந்தார். விவசாயிகளின் நலன்களுக்காக வெளிப்படையாக வாதிட்டார். பொது வாழ்வில் கட்சி தலைவர்களிடையே வளர்ந்து வரும் ‘ஆணவத்தை’ அவர் விமர்சித்தார், மேலும் நீதித்துறையில் கட்டுப்பாடு தேவை என்பதை வலியுறுத்தினார். தற்போதைய ‘ஜி2’ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கூட, எதிர்க்கட்சிகளுக்கு முடிந்தவரை இடம் கொடுக்க அவர் முயன்றார்.

விதிகள், நடைமுறைகள் குறித்து அவர் உறுதியாக இருந்தார். இருப்பினும், இந்த விஷயங்களில் தனது பங்கு தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாக அவர் உணர்ந்தார்.

ஜெகதீப் தன்கரின் ராஜினாமா அவரைப் பற்றி நிறைய கூறுகிறது. அதே நேரத்தில், அவரை துணை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தியவர்களின் நோக்கங்கள் குறித்த கடுமையான கேள்விகளையும் இது எழுப்புகிறது” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share