பீகாரில் நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. congress condemns residence certificate for bihar
பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளது. பீகாரில் 2003க்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆணவங்களை சமர்பிக்க வேண்டும். இதற்கு ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.

மேலும் குடியிருப்பு சான்றிதழை முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக வைத்துள்ளது.
இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள மசௌரி என்ற நகரில் RTPS இணையதளத்தில் ஒரு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நாய் பாபு என்ற பெயரில் குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் தந்தை பெயர் குட்டா பாபு, தாய் குட்டியா தேவி என கூறப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம் என்ற இடத்தில் நாயின் படம் உள்ளது. வீட்டு முகவரியும் குறிப்பிட்டுள்ள இந்த ஆவணத்தில் வருவாய்துறை அதிகாரி முராரி சவுகானின் டிஜிட்டல் கையெழுத்து உள்ளது.
நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் வெளியானதும் சற்று நேரத்தில் அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விண்ணப்பதாரருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி இயக்குநர் மற்றும் சான்றிதழ் வழங்கியவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
பீகாரில் நாய்க்கு அலட்சியமாக குடியிருப்பு சான்றிதழ் வழங்கி உள்ள சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில் “அந்த நாய் வாக்காளராக வந்து பாஜகவிற்கு வாக்களிக்கும். அவர்கள் நாய் பாபுவை ஒரு வேளை வேட்பாளர்களாக கூட நிற்க வைப்பார்கள். அது மட்டுமா அனைத்து பாஜக தொண்டர்களும் நாய் பாபுவிற்கு வாக்களிப்பார்கள். இது பாஜக தேர்தல் முறையை மோசமாக கையாள்வதற்கு அப்பட்டமான உதாரணம். இந்த குற்றவியல் செயலில் தேர்தல் ஆணையமும் இணைந்துள்ளது. இந்த குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் பக்கவாட்டில் நின்று ஜனநாயகப் படுகொலையை தங்கள் மௌனத்தின் மூலம் ஆசீர்வதிக்கின்றன” என தெரிவித்துள்ளது.