கோவையில் FITTJEE நிறுவனம் மற்றும் தனியார் பள்ளி மீது பெற்றோர் புகார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Complaint against FITTJEE company in Coimbatore

சுகுணா PIP பள்ளி மற்றும் FITTJEE என்ற தனியார் நிறுவனமும் வைப்பு தொகையாக கொடுத்த 1 லட்சம் பணத்தை திரும்பி கொடுக்க மறுப்பதாக பெற்றோர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை காளப்பட்டி பகுதியில் Suguna PIP என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி நிர்வாகம், FITTJEE என்ற நிறுவனத்துடன் இணைந்து தங்கள் மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கான தனி வகுப்புகளை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

அதற்கு பள்ளி கட்டணத்தை தவிர்த்து ஒரு லட்சம் ரூபாய் Refund கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும் வகுப்புகள் முடிந்து 60 நாட்களுக்குள் அந்த ஒரு லட்சம் ரூபாய் திருப்பி தரப்படும் என்று விளம்பரம் செய்தனர். கடந்த சில வருடங்களாகவே இந்த திட்டத்தில் பலரும் அவர்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வகுப்புகள் முடிந்த 262 மாணவர்களுக்கு அந்த Refund கட்டணம் திருப்பி வழங்கப்படவில்லை.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் தங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை. அந்த நிறுவனத்திற்கு கட்டிடத்தை வாடகைக்கு தான் விட்டுள்ளோம் என்று பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (நவம்பர் 12) சுமார் 50 பெற்றோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், Suguna PIP பள்ளியில் கோவை மாணவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் 262 மாணவர்களுக்கு அந்த கட்டணம் திருப்பி தரப்படவில்லை. தங்களது பணம் 2 கோடி 62 லட்சம் பள்ளி நிர்வாகத்திடமும், FITTJEE நிறுவனத்திடமும் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் சிக்கல்கள் ஏற்பட்டு ஆசிரியர்கள் முறையாக மாணவர்களுக்கு வகுப்புகளையும் எடுக்காமல் பயிற்சிகள் பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதில் உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பள்ளி நிர்வாகம் தரப்பில், தங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமில்லை. தாங்கள் அந்த கட்டிடத்தை வாடகைக்கு தான் அந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளோம். பெற்றோர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். பெற்றோர்கள் கட்டியுள்ள பணம் அந்த நிறுவனத்திற்கு தான் சேரும் பள்ளி கணக்கில் வராது. நாங்கள் இது குறித்து எந்த விளம்பரமும் செய்யவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share