வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்கு பிறகு ரூ.16 உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிற 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களாக விலை உயர்வு அமல்படுத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 1) வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் சென்னையில் ரூ.1,754-க்கு விற்பனை செய்யப்படுகிறது.