தமிழகத்தில் குளு, குளு வானிலை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மார்கழி மாதம் தொடங்கியிருக்கும் நிலையில் மாலை தொடங்கி அதிகாலை வரை பனி கொட்டுகிறது. கொடைக்கானல், ஊட்டி, வால்பாறையில் உறைபனி பெய்து, குட்டி காஷ்மீர் போல் காட்சியளிக்கின்றன.
குளிர் அதிகமாக இருப்பதால் பலருக்கும், இருமல், காய்ச்சல் பாதிப்பும் ஏற்படுகிறது.
இந்தநிலையில் அடுத்த சில நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை டிசம்பர் 21 முதல் 24ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட குளிர் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதுபோன்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தீபகற்ப இந்தியாவில் உயர் அழுத்த நிலை ஆதிக்கம் செலுத்துவதால், குளுகுளு நாட்கள் தொடரும். மலைப்பகுதிகளில் குளிர் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
வால்பாறை, ஒசூர் மலைகள், ஏற்காடு போன்ற மலை பகுதிகளில் போட்டி போட்டு குளிர் அடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மலை பகுதிகளின் வெப்பநிலை… டிகிரி செல்சியசில்
அரக்கு (ஆந்திரா) – 5.8
வால்பாறை – 6.4
ஹாசன், கர்நாடகா – 7.0
ஊட்டி – 7.2
கொடைக்கானல் – 8.4
இடுக்கி (செங்குளம்), கேரளா – 8.5
லம்பசிங்கி, (ஆந்திரா) – 9.6
வயநாடு (கபனிகிரி), கேரளா – 9.7
ஏற்காடு – 10.0
உள் தமிழகத்தின் வெப்பநிலை
ஓசூர் – 9.7
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி – 10.1
கிருஷ்ணகிரி – 12.5
தாளவாடி, ஈரோடு – 10.6
பழனி – 13.0
சூளகிரி, கிருஷ்ணகிரி – 13.2
மொரப்பூர், தர்மபுரி – 13.4
தொடாமுத்தூர், கோவை – 13.7
கோவை – 14.1
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி – 14.2
குன்னத்தூர், கோவை – 14.2
பொள்ளாச்சி, கோவை – 14.3
கிணத்துக்கடவு, கோவை – 14.7
ஹரூர், தர்மபுரி – 14.9
தருமபுரி – 15.0
நத்தம், திண்டுக்கல் – 15.0
திருப்பத்தூர் – 15.1
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி – 15.3
விரிஞ்சிபுரம், வேலூர் – 15.4
ரெட்டியசத்திரம், திண்டுக்கல் – 15.8
சேலம் – 16.3
பெரம்பலூர் – 16.3
நெய்வேலி, கடலூர் – 16.3
திருத்தணி – 16.5
கோவில்பட்டி, தூத்துக்குடி – 16.7
திருப்பூர் – 17.0
சிவகங்கை – 17.0
மதுரை AP – 17.0
காட்பாடி – 17.0
கடலோர பகுதிகளில் வெப்பநிலை
கடலூர் – 19.2
பாண்டி – 19.2
தூத்துக்குடி – 19.4
எண்ணூர் – 19.5
கும்மிடிப்பூண்டி – 19.5
கிண்டி – 19.6
மயில்தாடுதுறை – 19.6
திருவாரூர் – 19.9
கேளம்பாக்கம் – 19.9
சென்னை விமான நிலையம் – 20.2
தொண்டி – 20.5
நாகப்பட்டினம் – 20.5
சென்னை – 20.6
