அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் நீடிக்கும் : உறைபனி எச்சரிக்கை!

Published On:

| By Kavi

அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓரிரு மாதங்களாக மக்களை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை தர்மபுரியில் 16.5° செல்சியஸாகவும், கொடைக்கானலில் 4.0° டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது

ADVERTISEMENT

இந்தநுலையில் இன்று (ஜனவரி 21) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,

21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ADVERTISEMENT

23-01-2026 முதல் 27-01-2026 வரை : கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை நிலவரம்

ADVERTISEMENT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை
21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல்
மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share