டிஜிட்டல் திண்ணை: கூட்டணி ஆட்சி + 50 சீட்.. அமித்ஷா டிமாண்ட்.. இபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன? டெல்லியில் ‘பரபர’ சீன்ஸ்

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ’தேர்தல் களத்தில்தான்
எத்தனை விசித்திரங்கள்’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. விசித்திரம், சித்திரம்னு பேசுறீரு..

ADVERTISEMENT

எடப்பாடியின் டெல்லி விசிட் பத்திதான் சூடா தகவல்கள் இருக்குய்யா.. அதை சொல்றேன்..

ஓ… அமித்ஷா- எடப்பாடி சந்திப்பா?

ADVERTISEMENT

ஆமாய்யா.. எடப்பாடி டெல்லி போறதுக்கு முன்னாடியே, அதிமுகவுல எஸ்பி வேலுமணியும் பாஜகவுல அண்ணாமலையும் டெல்லியில சில பூர்வாங்க வேலைகளை செஞ்சு வைச்சாங்க.. அண்ணாமலையைப் பொறுத்தவரைக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரனை மறுபடியும் பாஜக கூட்டணிக்குள்ள கொண்டு வர்றதுன்னு மூவ் செஞ்சாரு.. இந்த வேலையை எல்லாம் முடிஞ்ச உடனே எஸ்பி வேலுமணி, கோவைக்கு ரிட்டர்ன் ஆகிட்டாரு..

டெல்லி போன எடப்பாடி நேத்து நைட்டு 10 மணிக்கு மேலதான அமித்ஷாவை சந்திச்சாரு.. இந்த முறை சந்திப்பு ரொம்பவே சுமூகமாகத்தான் இருந்துச்சுன்னு சொல்றாங்க..

ADVERTISEMENT

நாம விசாரிச்ச டெல்லி சோர்ஸ், “ இந்த சந்திப்புல கூட்டணி, தொகுதி பங்கீடு உட்பட பல முக்கியமான விஷயங்களை பேசினாங்க..

முதல்ல, “2021 எலக்‌ஷன்ல கூட்டணியில இருந்த கட்சிகள் எல்லாம் இருக்கனும்.. கூடுதலா கட்சிகளை சேர்த்தாகனும்னு பிஎம் சொல்லி இருக்காரு.. இந்த முறை திமுகவை எப்படியும் தோற்கடிச்சுதான் ஆகனும்னு பிஎம் உறுதியா இருக்காரு.. அதை நீங்க புரிஞ்சுக்கனும்”னு பீடிகையோடுதான் எடப்பாகிட்ட அமித்ஷா பேச ஆரம்பிச்சாரு..

அப்புறமா, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே அதிமுக அணி/ பாஜக அணின்னு ரெண்டா பிரிச்சு, எடப்பாடியை சந்திச்சு கூட்டணியில சேருகிறவங்களுக்கு அதிமுகவே தொகுதிகளை ஒதுக்கீடு செய்யட்டும்; பாஜக சேர்த்துகிற கட்சிகளுக்கு பாஜக தொகுதிகளை கொடுக்கட்டும்னு பேசுனாங்க..

இதுல பாஜக அணிக்கு 50 சீட் கொடுக்கனும்னு அமித்ஷா சொன்னாரு.. இந்த 50 சீட்டுலதான் ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு பாஜகவே தொகுதிகளை கொடுத்துரும்னு அமித்ஷா பார்முலாவை ஓபன் செஞ்சாரு..

அப்ப, “டிடிவி தினகரன் தனிக் கட்சியை நடத்துறாரு.. அதனால அவரை சேர்த்துக்கிறதுல்ல எந்த பிரச்சனையும் எங்களுக்கு இல்லை”ன்னு சொன்ன எடப்பாடி, ஓபிஎஸ்ஸை சேர்க்கிறதுக்குதான் ரொம்பவே அப்ஜெக்சன் தெரிவிச்சாரு.. ஓபிஎஸ்ஸை பத்தி சொல்லும் போது, “போன எலக்‌ஷன்ல நாங்க தோக்கனும்னே வேலை பார்த்தவரு ஓபிஎஸ்.. எங்களுக்கு துரோகம் செஞ்சவரு.. அவரை எப்படி கூட்டணியில சேர்க்க முடியும்? அதை எங்க தொண்டர்கள் ஏத்துக்க மாட்டாங்க.”ன்னு எடப்பாடி அழுத்தமா சொன்னாரு..

அதுக்கு அமித்ஷாஜி, “திமுகவுல இருந்து பிரிஞ்சு போன மதிமுக, இப்ப திமுகவுடன் கூட்டணி வெச்சுக்கலையா? அதுமாதிரி ஓபிஎஸ்-ம் தனிக் கட்சியாத்தான் எங்களோட கூட்டணி வைப்பாரு..”ன்னு சொன்னாரு…

அதாவது, பண்ருட்டி ராமச்சந்திரன், ஏற்கனவே ரஞ்சித்குமார் அப்படிங்கிறவர் மூலமாக Movement for Growth and Rights Party – MGR-ன்னு ஒரு கட்சியை பதிவு செஞ்சு வெச்சிருக்காரு.. அந்த கட்சியைத்தான் ஓபிஎஸ் எலக்‌ஷனுக்கு பயன்படுத்துவாருன்னு எடப்பாடிகிட்ட அமித்ஷா சொன்னாரு..

இந்த சப்ஜெக்ட் அப்படியே இருக்க, அடுத்ததா, கூட்டணி ஆட்சிதான் அமைக்கனும்னு அமித்ஷா சொன்னாரு… இதுக்கு பெருசா எடப்பாடி ரியாக்‌ஷன் காட்டிக்காம இருந்ததை பார்த்தா ஓகேன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு..

இதுக்கு அப்புறமா திமுகவை பத்தி ரெண்டு பேரும் பேசுனாங்க.. “திமுகவோட மினிஸ்டர்ஸ் ஏகப்பட்ட பணத்தை குவிச்சு வெச்சிருக்காங்க.. எலக்‌ஷனுக்கு அதைத்தான் பயன்படுத்த போறாங்க.. அதை எப்படியாவது தடுத்தாகனும்”னு எடப்பாடி சொன்னாரு..

இதுக்கு, “நாங்களும் பார்த்துகிட்டுதான் இருக்கோம்.. ஆக்‌ஷன் எடுக்கிறதுக்கான வேலை நடந்துகிட்டுதான் இருக்குது”ன்னு அமித்ஷா பதில் சொன்னாரு..

கடைசி சப்ஜெக்ட்டா விஜய் பத்தி பேச்சு வந்தது.. அப்ப அமித்ஷா, “திமுகவோட காங்கிரஸ் கூட்டணி வைக்காது.. ராகுல் காந்தியைப் பொறுத்தவரைக்கும் விஜய் கூட கூட்டணி வைக்க நினைக்கிறார்னு எங்களுக்கு ரிப்போர்ட் வந்திருக்கு.. கடைசி நேரத்துல அப்படிதான் நடக்கும்..

விஜய்- காங்கிரஸ் கூட்டணின்னு வரும்போது, கிறிஸ்டியன்ஸ் ஓட்டுகள் திமுகவுக்கு போகாம கணிசமா அந்த கூட்டணிக்கு டைவர்ட் ஆகிடும்.. அதே மாதிரி உருது பேசுற முஸ்லிம்கள் இருக்கிற 20 தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிட போகுது.. அவங்களும் முஸ்லிம் ஓட்டுகளை திமுகவுக்கு போகாம பிரிச்சுடுவாங்க.. அதனால திமுக கூட்டணி தோத்துதான் போகும்”னு சொல்லி முடிச்சாரு என்றனர்.

ஓஹோ ரொம்ப டீட்டெய்லா பேசியிருக்காங்க.. அதிமுக சோர்ஸ் என்ன சொல்லுது?

எடப்பாடி டெல்லி விசிட் பத்தி அவருக்கு நெருக்கமானவங்க கிட்ட பேசுனப்ப, “திமுகவை எப்படியாவது தோற்கடிச்சாகனும்னு டெல்லி நினைக்கிறதைத்தான் அமித்ஷாவும் அண்ணன்கிட்ட (எடப்பாடி) சொல்லி இருக்காரு.. கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் நாங்க பாமகவை சேர்த்துட்டோம்.. அன்புமணிகிட்ட 18 சீட் தர்றோம்னு பேசி முடிச்சாச்சு.. பாஜக சைடுல 50 சீட் கேட்கிறாங்க.. 40 சீட் கொடுக்கலாம்னு அண்ணன் நினைக்கிறாரு.. தேமுதிகவும் இங்கதான் வருவாங்கன்னு அண்ணன் நம்பிக்கையா இருக்காரு” என்றனர்.

அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி டிமாண்ட் பத்தி கேட்டப்ப, “எங்க பார்ட்டி சீனியர்ஸ்கிட்ட இதை பத்தி அண்ணன் ஏற்கனவே சீரியசா டிஸ்கஷன் செஞ்சாரு.. அப்ப, “எந்த ஒரு ஜீவனா இருந்தாலும் நடக்க கால் வேணுமுங்க.. நம்ம தமிழ்நாடும் தற்போது கூட்டணி ஆட்சியாலதான் சரியா நடக்க முடியும்..

தென்னிந்தியாவுல இருக்கிற ஸ்டேட்ஸ் எடுத்துக்குங்க.. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கான்னு எல்லா மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடந்திருக்குது.. நடக்குது.. அதனால காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கனும்னு” சொல்லி இருந்தாரு.. அதனால கூட்டணி ஆட்சிங்கிற டிமாண்ட்ல எந்த குழப்பமும் இல்லைன்னு நினைக்கிறோம்” என்கின்றனர்.

ஓபிஎஸ்ஸை கூட்டணியில சேர்க்கிறதுக்கு அமித்ஷாகிட்ட அப்ஜெக்‌ஷன் தெரிவிச்சிருக்காரேன்னு கேட்டதுக்கு டென்ஷனாகிட்டாங்க நம்ம சோர்ஸ்.. “ஓபிஎஸ் போடுற கணக்கே வேறங்க.. பாஜக தயவால கூட்டணிக்குள்ள நுழைஞ்சுடலாம்.. பாஜக கூட்டணி ஆட்சின்னு சொல்றதால எப்படியாவது மறுபடியும் டெபுட்டி சிஎம் போஸ்ட் வாங்கிடலாம்னு பேசிகிட்டு இருக்கிறாராம்.. இந்த மாதிரி சுத்தி வளைச்சாவது ஓபிஎஸ் குடைச்சல் கொடுப்பாருன்னு தெரிஞ்சுதான் அமித்ஷாகிட்ட அண்ணன் ஸ்டிராங்கா ஓபிஎஸ்-க்கு அப்ஜெக்‌ஷன் தெரிவிச்சிருக்காரு.. டிடிவியைப் பொறுத்தவரைக்கும் அவரு கூட்டணிக்குள்ள வர்றதுன்னு முடிவு பண்ணிட்டாரு.. அதனாலதான் அவங்க பொதுக்குழுவுல பேசும் போது வெற்றிக் கூட்டணியில இருப்போம்னு சொல்லி இருந்தாரு”ன்னு சொல்றாங்க என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை அழுத்திவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share