ஜெர்மன் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.
தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது #DravidianModel அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!
உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!” என பேசியதாக பகிர்ந்துள்ளார்.