டிஜிட்டல் திண்ணை: தமிழகத்தில் களமிறங்கும் அதானி.. ஸ்டாலினின் ’புது’ ஸ்கெட்ச்.. அமித்ஷா- நயினார் மீட்டிங்- டிடிவி தினகரன் ஹேப்பி!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், இனிதான் ‘காளி’யோட ஆட்டம்’ போல என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா.. யாரோட ஆட்டத்தை சொல்றீரு?

ADVERTISEMENT

எல்லா கட்சிகளும்தான்.. ஜெகஜோதியா எலக்‌ஷன் களத்துல குதிச்சுட்டாங்க.. இன்னைக்கு திமுக தேர்தல் தயாரிப்புக்கான 12 பேர் குழுவை கனிமொழி தலைமையில அறிவிச்சிருக்கு.. கரூர் சம்பவத்துக்கு அப்புறமா விஜய் நாளைக்கு முதல் பிரசாரத்தை ஈரோட்டுல தொடங்குறாரு.. நயினாரு டெல்லி போய்ட்டு வந்திருக்காரு..

அடுக்காதய்யா.. ஒவ்வொன்னா சொல்லும்…

ADVERTISEMENT

திமுகவோடதான் கூட்டணின்னு உறுதி செய்ய இப்பதான் காங்கிரஸின் ஐவர் குழு சிஎம் ஸ்டாலினை சந்திச்சது.. நாங்களும் குழு போடுவோம்.. அப்ப தொகுதிகளை பத்தி பேசலாம்னு அனுப்பி வெச்சாரு சிஎம்.. திமுக தரப்புல தொகுதி பேச்சுவார்த்தை குழு அறிவிப்பு வரும்னு எதிர்பார்த்தா தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வந்திருக்கு..

அப்ப திமுகவுல அடுத்த என்ன அறிவிப்பாம்?

ADVERTISEMENT

அடுத்த குழு பத்தின அறிவிப்பு வருவதற்கு முன்னாடியே வேட்பாளர்கள் தேர்வில் ரொம்ப சீரியசா இருக்கிறாரு சிஎம்.. இதை பத்தி திமுக சீனியர்கள் சிலர்கிட்ட பேசுனோம்.. அவங்க, “2019, 2021 எலக்‌ஷன்கள்ல வியூக வகுப்பு டீம் ஒரு தொகுதிக்கு 3 பேருன்னு வேட்பாளர் லிஸ்ட்டை ரெடி செஞ்சது. இதை தெரிஞ்சுகிட்ட ஒரு டீம் அந்த 3 பேரிடமும் பணம் வசூலிச்சது.. வேட்பாளரா அறிவிச்சவங்ககிட்ட நாங்க சொல்லித்தான் நீங்க செலக்ட் ஆகினீங்கன்னு கணக்கை செட்டில் செஞ்சுருச்சு.. மத்த 2 பேருக்கும் பாதி பணத்தை கொடுத்தும் கொடுக்காமலும் சிஎம் வரைக்கும் கம்ப்ளெயிண்ட் ஆகிடுச்சு.. இன்னுமே இந்த அக்கப்போர் முடியலை…

இதை எல்லாம் கணக்குல வெச்சு இப்ப சிஎம், வேற ஸ்கெட்ச் போட்டு இருக்காரு..

அதாவது வழக்கம் போல உளவுத்துறை ஒரு தொகுதிக்கு 3 பேரை செலக்ட் செஞ்சு ரிப்போர்ட் தரும்.. அதோட PEN டீம் ஒரு 3 பேர் கொண்ட ரிப்போர்ட் கொடுக்கும்.. இவங்க இல்லாம இன்னொரு ஏஜென்சிகிட்டயும் ரிப்போர்ட் கேட்டிருக்காரு சிஎம். ஆக ஒரு தொகுதிக்கு 9 பேரை தன் டேபிளில் வெச்ச்சு பைனலா தாமே ஒருவரை செலக்ட் செய்ய போறாரு சிஎம்.. இப்படி செஞ்சுட்டா ஒரு புகாரும் வராதுன்னு நினைக்கிறாரு” என்றனர்.

ஓஹோ.. செம்மய்யாதான் இருக்கு.. விஜய் சங்கதியை சொல்லுமய்யா

ஈரோட்டுக்கு விஜய் நாளைக்கு போறாரு இல்லையா? செங்கோட்டையன் தன்னோட பலத்தை காண்பிச்சாகனும்னு ரொம்ப மெனக்கெடுறாரு.. விஜய்யும் நல்லா பேசனும்னு ‘தீவிர’ தயாரிப்புல இருக்காரு..

செங்கோட்டையன் தரப்புல ஈரோடு மீட்டிங் பத்தி பேசுனப்ப, “விஜய்கிட்ட ஏற்பாடுகளை பத்தி எல்லாம் அண்ணன் விலாவாரியா சொல்லிட்டாரு.. அப்படியே எங்க கோபிச்செட்டிபாளையம் பக்கத்துலதான இருக்கு.. மதியம் லஞ்ச்-க்கு வீட்டுக்கு வந்துடுங்கன்னு சொன்னாரு.. விஜய்யோ, ‘அண்ணே.. இப்ப வந்தா கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது.. எலக்‌ஷன் பிரசாரத்துக்கு கோபிக்கு வரும் போது கண்டிப்பாக வீட்டுக்கு வர்றேன்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு”என்கின்றனர்.

சரி.. நயினார் நாகேந்திரன் டெல்லி விசிட்டுல என்ன விசேஷம்?

நயினாரு டெல்லிக்கு போய் பெரும்பிடுகு முத்தரையர் ஸ்டாம்ப் ரிலீஸ் பங்ஷனில கலந்துகிட்டாரு.. அதுக்கு முன்னாடி நிர்மலா சீதாராமனை சந்திச்சு எலக்‌ஷன் நிலவரத்தை பத்தி பேசினாரு.. பங்ஷன் முடிஞ்ச கையோட அமித்ஷாவையும் சந்தித்து டீட்டெய்லா பேசியிருக்காரு நயினார்..

அமித்ஷா- நயினார் மீட்டிங்குல என்ன பேசுனாங்களாம்?

இதை பத்தி டெல்லியில இருக்கிற பாஜக சோர்ஸ்கள் கிட்ட பேசுனப்ப, “மத்திய அமைச்சர் பணியை விட எங்க ஜிக்கு எலக்‌ஷன் ஒர்க்தான் ரொம்ப அதிகம்.. அதுக்குதான் முன்னுரிமை தர்றாரு.. நயினார்கிட்ட தமிழகத்தோட நிலவரத்தை முழுசா கேட்டுகிட்டாரு.. அப்ப, ”டிடிவி தினகரன் போன்றவங்ககிட்ட உங்க தனிப்பட்ட பகையை, வெறுப்பை எல்லாம் காண்பிக்காதீங்க.. நீங்க எல்லாரையும் அரவணைச்சு போங்க.. அதுதான் நமக்கு நல்லதுன்னு” சாப்ட்டா அட்வைஸ் செஞ்சாரு..

அப்ப நயினார், ஒரு லிஸ்ட்டை நீட்டினாரு.. அதுல மொத்தம் 80 தொகுதிகளைப் பற்றிய ஃபுல் டேட்டா இருந்துச்சு.. அந்த தொகுதிகளில்ல பாஜகவோட செல்வாக்கு என்ன? எலக்‌ஷனில வாங்குன ஓட்டு எவ்வளவு?ன்னு எல்லாத்தையும் அதுல நோட் பண்ணி ரிப்போர்ட்டா கொடுத்திருந்தாரு.. அந்த 80 தொகுதிகளை வெச்சு அதிமுககிட்ட பேசலாம்னு நயினார் சொன்னார்.. ரிப்போர்ட்டை புரட்டிப் பார்த்துகிட்டே சென்னை வரும் போது பேசுவோம்னு சொல்லி அனுப்பிட்டாரு” என்கின்றனர்.

பிஎம் மோடி தமிழ்நாட்டுக்கு வர்றாமே?

அதுக்கு முன்னாடி, அமித்ஷா- நயினார் சந்திப்புல டிடிவி தினகனரனை பத்தி பேசுன விஷயம் தினகரன் காதுக்கும் போனதாம்யா.. இதுல டிடிவி ரொம்பவே குஷியாகிட்டாராம்.. கட்சி சீனியர்கள் கிட்ட ரொம்ப பெருமையா இதை சொல்லி ஷேர் செஞ்சுகிட்டாரு தினகரன்

பிஎம் மோடி வர்றது பத்தியும் நம்ம சோர்ஸ்களிடம் கேட்டோம்யா.. அவங்க என்னா சொல்றாங்கன்னா, “நயினார் நாகேந்திரன் இப்ப போன டூரில் ரொம்ப பெரிய எழுச்சி எல்லாம் இல்லை.. பெயிலியர்தான் போல.. இது பிஎம்-க்கும் தெரியும்.. புதுக்கோட்டையில நயினார் நடத்துற மீட்டிங்குல பிஎம் கலந்துக்கனும்னு நயினார் விரும்பினாலும் அப்செட்டில் இருக்கிறதால பிஎம் வர்றது கொஞ்சம் சந்தேகம்தான்.. அப்படி பிஎம் வராம போனால் அமித்ஷா ஜிதான் வர வாய்ப்பு இருக்குன்னு” சொல்றாங்கப்பா

ஓஹோ..எல்லாத்தையும் கடகடன்னு சொல்லிட்டீரே… ‘எலக்‌ஷன் ஸ்பெஷல்’எதுவும் இல்லையா?

ஏனய்யா இல்லை? தமிழக தேர்தல் களத்துல ‘ஸ்பெஷலா’ இறங்கப் போவது யார் தெரியுமா? இந்தியாவின் பில்லியனரான தொழிலதிபர் அதானிதான்..

என்னய்யா.. ரொம்பவே பெரிய ஸ்பெஷலா சொல்றீரு?

கேளும்.. தமிழகத்துல பாஜக- அதிமுக கூட்டணிக்காக களமிறங்கிறாரு அதானி.. அவரோட ரோலைப் பற்றி டெல்லியில் விசாரிச்சப்ப, “போன முறை அமித்ஷாவை பார்க்க எடப்பாடி டெல்லி வந்தப்பவே அதானியும்தான் சந்திச்சாரு.. எடப்பாடியை அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்குப் போய் சந்திச்ச அதானி, ”அமித்ஷாஜி சொல்லி இருக்கிறாரு.. எலக்‌ஷனுக்கான ஃபினான்ஸ் பத்தி நீங்க கவலைப்படாதீங்கன்னு” உறுதி தந்தாரு..

இதுக்கு அப்புறமா தன்னை சந்திச்ச தமிழக விஐபி ஒருத்தர்கிட்ட, எடப்பாடியை பத்தி ரொம்பவே புகழ்ந்து தள்ளினாரு அதானி.. ஓபிஎஸ்ஸை கம்பேர் செய்யுறப்ப எடப்பாடிதான் பெஸ்ட்ன்னும் சொல்லி இருக்காரு..

அப்படியே இப்போதைய சிஎம், டெபுடி சிஎம், நிதித்துறை செக்ரட்டரி உதயசந்திரன்னு எல்லாத்தையும் சந்திச்சுருக்கேன்… இந்த கவர்மெண்ட்டுல ‘பணமும் வாங்கலை’.. ’வேலையும் ஒன்னும் நடக்கலை.. ஆனா எடப்பாடி கவர்மெண்ட் அப்படி இல்லை.. ஜரூராவே எல்லாமும் நடந்துச்சுன்னும் கம்பேர் செஞ்சி சொன்னாரு…

இந்த தெம்புலதான் அதிமுக ஃபுல் போர்சா களமிறங்கிருக்கு” என சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share