ஜெர்மன் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஜெர்மன் வாழ் தமிழர்கள் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உரையாடினார்.
முதல்வர் ஸ்டாலின் ஒரு வார அரசு முறை பயணமாக ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று (ஆகஸ்ட் 30) புறப்பட்டுச் சென்றார்.
ஜெர்மனி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் ஜெர்மன் வாழ் தமிழ் குடும்பங்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “ஜெர்மனியில் தமிழர் குடும்பத்தினர் பாசத்துடன் வரவேற்றனர்; தமிழகத்தின் சாதகமான அம்சங்களை முன்வைத்து முதலீடுகளை ஈர்க்க ஜெர்மன் வருகை தந்துள்ளேன். தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க பெருமையுடன் வந்துள்ளேன்” என குறிப்பிட்டு படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ஜெர்மனியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த படங்கள்:



