ADVERTISEMENT

ஆபாசப் பேச்சு: பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிப்பா? கடும்கோபத்தில் ஸ்டாலின்

Published On:

| By Aara

ஏற்கனவே பல சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான அமைச்சர் பொன்முடி, மீண்டும் ஒரு ஆபாச சர்ச்சை பேச்சில் சிக்கி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். Stalin also sacked Ponmudi from cabinet?

கடந்த ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் இயங்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழா திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான சென்னை அன்பகத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த விழாவில் வனத்துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். CM Stalin also sacked Ponmudi from cabinet?

அந்த உரையில்தான் மகளிர் தப்பா நினைக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு… சைவ வைணவ சமயங்களை மட்டுமல்ல… பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் அளவுக்கு ஆபாசமாக வெளிப்படையாக சிரித்துக்கொண்டே, நக்கலாக, நையாண்டியாக பேசியிருக்கிறார் பொன்முடி.

ADVERTISEMENT

இந்த வீடியோ வெளியானால் சர்ச்சையாகும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இதை பரவாமல் தடுக்க முயற்சித்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில யூடியூப் சேனல்கள் மூலம் இந்த வீடியோ பரவி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியின் பார்வைக்கும் சென்றுள்ளது.

அதிர்ந்து போன கனிமொழி உடனடியாக இதுபற்றி முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்று விட்டு.. பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

ADVERTISEMENT

அடுத்த சில நிமிடங்களில் திமுக தலைமை கழகத்தில் இருந்து பொன்முடியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக, தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலில், பொன்முடியின் அமைச்சர் பதவியையும் பறித்துவிடலாமா என்றுதான் ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால் முதல்கட்ட எச்சரிக்கையாக கட்சிப் பதவியைப் பறித்திருக்கிறார்.

ஆனாலும் பொன்முடியின் பேச்சு இந்து சமயத்தின் வைணவ, சைவ ரீதியாகவும்- மேலும் பெண்கள் தொடர்பாகவும் கடுமையான அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதால்… துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மட்டும் நீக்கினால் போதாது அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சமூக தளங்களில் எதிர்க்கட்சிகளும் திமுகவைச் சேர்ந்த பெண்களுமே கூட வலியுறுத்தி வருகின்றனர். CM Stalin also sacked Ponmudi from cabinet?

இதனால் பொன்முடி மீது கடுமையான கோபத்தில் இருக்கும் ஸ்டாலின்,. அடுத்த கட்டமாக அமைச்சர் பதவியை பறித்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் அறிவாலயத்தில்.

இந்நிலையில் பொன்முடி இடத்தில் துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா எம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share